Menu
have us call you back!
Name*
E-mail address*
Phone number*

பாஸ்போர்ட் நான்கு நிறங்களில் இருப்பதற்கான காரணங்கள் (அரசாங்கத்தால் கொடுக்கப்படும் பயண இசைவுச்சீட்டு)

பாஸ்போர்ட் ஒவ்வொரு நாட்டின் அடையாள அட்டையாகவும், நல்லெண்ணச் சான்றாக விளங்குகிறது. உலகம் முழுவதும் பாஸ்போர்ட் நான்கு நிறங்களில் மட்டும் தான் உண்டு. அவை சிவப்பு, நீலம், பச்சை மற்றும் கருப்பு நிறங்களாகும். பாஸ்போர்ட் நான்கு நிறங்களில் கிடைப்பதற்கான காரணங்கள் பற்றி காண்போம்.

சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு, நமக்கு பாஸ்போர்ட்டின் அளவு மற்றும் வடிவமைப்பு, நாட்டின் சுதந்திரம் அடிப்படையிலும், புவியின் அடிப்படையிலும், கொள்கையின அடிப்படையிலும் நிறங்களை வழங்கியிருக்கிறது. ஆர்டன் குழுவின் அமைப்பின் துணைத்தலைவர், ஹரன்போஹாசியன் அவர்களின் கருத்துப்படி, பாஸ்போர்ட் என்பது முழுவிவரங்கள், அடையாள குறயீடுகள், காரணங்கள், அடிப்படையில் பாஸ்போர்ட் நிறங்களை தேர்ந்தெடுக்கின்றனர் என்பதை வலியுறுத்துகிறார்.

1. பச்சை நிற பாஸ்போர்ட்

உலகில் உள்ள நாடுகளில், சில நாடுகள் மதத்தின் அடிப்படையில் பாஸ்போர்ட் நிறத்தை தேர்வு செய்கின்றனர். இவற்றுள் முஸ்ஸீம்கள் அதிகமாக உள்ள நாடுகள் பச்சை நிறமுள்ள பாஸ்போர்ட் தேர்வு செய்கின்றனர். ஏனென்றால், இஸ்லாமியர்கள் தீர்க்கதர்சி முகமது அவர்களுக்கு பிடித்தமான நிறம் என்பதால், இஸ்லாமிய நாடுகள் விரும்புகின்றனர். பாகிஸ்தான், சவுதி அரேபியா, மொராக்கோ போன்ற இஸ்லாமிய நாடுகளில் பச்சை நிற பாஸ்போர்ட் பயன்படுத்துகின்றனர். மேலும் ஆப்பிரிக்க நாடுகளான புர்கினாபாசோ, ஜவரி கோஸ்ட், செனிகல், நைஜிரியா மற்றும் நைஜர், போன்ற நாடுகள் மேற்கு ஆப்பிரிக்க பொருளாதார அமைப்பில் உறு;பபினராக இருப்பதால் இந்த பச்சை நிற பாஸ்போர்ட்டை பயன்படுத்துகின்றனர்.

2. சிவப்பு நிற பாஸ்போர்ட்

சிவப்பு நிறம் என்பது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நிறமாகும். ஹரன்போஹாசியன் அவர்களின் கருத்துப்படி, சிவப்பு நிற பாஸ்போர்ட் என்பது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இறந்த மற்றும் நிகழ் காலத்தை பற்றி சுட்டி காட்டுகிறது. சீனா, செர்பியா, லாட்வியா, ரோமனியா, ஜோர்ஜியா மற்றும் போலாந்து போன்ற நாடுகள் சிவப்பு நிற பாஸ்போர்ட்டை வைத்துக்கொள்கின்றனர். ஐரோப்பிய யூனியன்கள் உள்ள நாடுகளும் இந்த சிவப்பு நிற பாஸ்போர்ட்டை பயன்படுத்துகின்றனர்.

3. நீலம் நிற பாஸ்போர்ட்

புதிய பன்னாட்டு சங்கத்திலுள்ள நாடுகள் நீல நிற பாஸ்போர்ட்டை பயன்படுத்துகின்றனர். இவர்களுடன் இந்தியா, வட அமெரிக்கா, தென்அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் பயன்படுத்துகின்றனர். கரீபியன் அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளும், பயன்படுத்துகின்றனர். இந்நாடுகள், புவியியல் அமைப்பின் படி பெருங்கடலின் மத்தயில் அமைந்துள்ளதால் இந்த நீல நிற பாஸ்போர்ட்டை பயன்படுத்துகின்றனர்.

4. கருப்பு நிற பாஸ்போர்ட்

பொதுவாக கருப்பு நிற பாஸ்போர்ட்டை ஆப்பிரிக்க நாடுகளான சாம்பியா, போட்ஸ்வானா, புருண்டி, காபோன், அங்கோலா, மலாவி, சார்ட் மற்றும் ஜனநாயக குடியரசு நாடான காங்கோ மேலும் பல நாடுகள் பயன்படுத்துகின்றனர். கருப்பு நிற பாஸ்போர்ட், நியூசிலாந்து நாட்டின் நிறத்திற்கு இணையான ஒன்றாகும். இதனால் நியூசிலாந்து இந்த கருப்புநிற பாஸ்போர்ட்டை பயன்படுத்துகின்றனர். சர்வதேச விடுமுறைகளில் அல்லது தொழில்ரீதியாக கல்விரீதியாக பயணங்கள் செய்யும் போது முக்கியமான ஆவணங்கள், கூடவே பாஸ்போர்ட், விசா, காப்பீடு எப்போதும் நமக்கு உதவிகரமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *