உலகத்திலுள்ள இன்ஸ்டாகிராம் இடங்கள்
எல்லாரும் பயணங்களை விரும்புவார்கள், அப்படி பயணம் செய்ய முடியுமானால், திரும்பவர இயலாத வரை பயணத்தை மேற்கொள்வார்கள். இப்படி விடுமுறையில் பயணங்களை மேற்கொள்ளும் போது அரியவகை புகைப்படங்களை பதிவு செய்கிறோம். இந்த புகைப்படங்களை நம்முடைய அறிவுபூர்வமான செயல்பாடுகள் மூலமாக இந்த உலகத்திற்கு பகிர்ந்து கொள்வதை இன்ஸ்டாகிராம் என்கிறோம். இந்த இன்ஸ்டாகிராம் மூலம் உலகத்தில் காண முடியாத அரியவகை காட்சிகளையும் காண முடிகிறது. உலகத்தில் உள்ள இன்ஸ்டாகிராம் இடங்களை பற்றி காண்போம்.
1. நியூயார்க் – டைம் ஸ்குயர்
திறந்தவெளி பகுதியாகவும், ஆயிரக்கணக்கான பிரகாசமான ஒளித்திரைகளும்,வண்ணமயமான விளக்குகளும் உள்ள பகுதியாக காட்சியளிக்கிறது. டைம் ஸ்குயரில் இயற்கை அழகுகள், அற்புதங்கள் (ஆச்சரியங்கள்) இல்லாவிட்டாலும், ஒவ்வொரு விதத்திலும் அழகுடையதாக காட்சியளிக்கிறது.
2. இஸ்தான்புல் – இஸ்டிகல்கடோசி
இப்பகுதியில் அனைத்துவகையான பெண்களின் அழகு சாதனபொருட்களும், இசைக்கருவிகள் உள்ள கடைகள், புத்தக கடைகள், கலைப்பொருட்கள், சினிமா திரையரங்குகள் மற்றும் நூலகங்கள், சிற்றுண்டி சாலைகள், இரவு நேர கேளிக்கைகள், வரலாற்று நினைவுச்சின்னங்கள், உணவகங்கள், சாக்லெட் விற்பனை இடங்கள் மற்றும் சுதந்திரமான வீதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாகவும், இஸ்தான்புல் மிகவும் பிரபலமான புகைப்படம் எடுப்பதற்கு சிறந்த இடமாகவும் விளங்குகிறது.
3. பார்சிலோனா – க்nவுல் பார்க்
அமைதியான பார்சிலோனாவில் உள்ள க்nவுல் பார்க்கில் சுற்றுலாப்பயணிகள் பார்க்கும் போது புகைப்படம் எடுக்காமல் இருக்கமுடியாது. இந்த இன்ஸ்டாகிராம் மூலம உலகத்தில் அரியவகை காட்சிகளை பார்ப்பதற்கு எளிதாக இருக்கிறது. இங்கு வரக்கூடிய பயணிகளுக்கு உண்மையிலேயே சொர்க்கத்திற்கு சென்ற ஒரு உணர்வு ஏற்படுகின்றது.
4. பாரிஸ் – ஈபிள் டவர்
21ம் நூற்றாண்டின் அற்புதமான கட்டிடக்கலைகளில் ஒன்றாகவும், அன்பின் அடையாள சின்னமாகவும் விளங்குகிறது, என்றும் அழியா அழகினை பெற்றுள்ளது. பாரிஸ் நாட்டின் பெருமையாகும். உலகத்திலே புகைப்படம் எடுப்பதற்கு சிறந்த இடங்களில் ஒன்றாகும்.
5. செயின்ட் பீட்டர் பார்க் (நெவ்ஸ்கை)
நீட்டிக்கப்பட்ட சாலையில் 4.4கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த செயின்ட் பீட்டர்பார்க்கின் பகுதிகளான வீடுகள், ரஸ்லடர்ஸ்டோகவ் அரண்மனை, பிரம்மாண்டமான நியோகிளாசிக்கல் கசான் தேவாலயம், கலை தளவாடங்கள், புத்தகநிலையம், வர்த்தக மையங்கள், 18ம் நூற்றாண்டின் தேவாலயங்கள், மேலும் பல இடங்கள் புகைப்படம் எடுப்பதற்கு சிறந்த இடங்களாகும்.
6. துபாய் – புர்ஜிகலிபா
உலகத்திலே மிக உயரமான கட்டிடமாகும். 830மீட்டர் உயரத்தை உடையது. உலகத்திலே புகைப்படம் எடுப்பதற்கு சிறந்த இடங்களில் ஒன்றாகும். இந்த பகுதி வெளியே இருந்து பார்க்கும் போது, மூச்சடைக்கிற மாதிரியான ஓர் உணர்வு ஏற்படுகின்றது. அவ்வளவு பிரம்மாண்டமான இடமாகும். உலகத்திலே ஷாப்பிங்
; செய்வதற்கு சிறந்த இடமாக விளங்குகிறது. பொன்நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.
7. ஸோ-பலோ- பார்கியட் (இபிரபியூரா)
இப்பகுதி நடைபயணம், சீரான ஓட்டம் மற்றும் ஓய்வு எடுப்பதற்கான இடம், பூங்காக்கள் அமைதியாக, பசுமையும் நிறைந்து காணப்படும். இந்த பூங்காவில் பொதுவாக இளைஞர்கள் அடிக்கடி வந்து ரசிக்ககூடிய இடமாகும். புகைப்படங்கள் எடுத்து உலகம் முழுவதும் பதிவேற்றம் செய்கின்றனர்.
8. பெரு – மச்சு பிச்சு நகரம்
வரலாற்றில் பழமையான உயர்ந்த நகரமாகும். கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று;. 13 அடி சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. வியப்பூட்டும் பழமையான கட்டிடக்கலை வாய்ந்தது. உலகத்திலேயே புகைப்படம் எடுப்பதற்கு சிறந்த இடங்களில் ஒன்றாக திகழ்கிறது
9. லண்டன் – டவர் பிரிட்ஜ்
மக்களுக்காக 1894ம் ஆண்டு திறக்கப்பட்டது. லண்டனில் உள்ள இந்த டவர் பிரிட்ஜ் அதிசயமான வியக்கத்தக்க ஒன்றாகும். இந்த டவர் பிரிட்ஜ் லண்டனின தேசிய நினைவுச்சின்னமாகும். இதன் வடிவமைப்பு; மற்றும் கட்டிடக்கலை தனித்தன்மை வாய்ந்ததாகும். லண்டனில் உள்ள இடங்களில் புகைப்படம் எடுப்பதற்கு சிறந்த இடமாகும்.
10. ரோம் – கொலோசியம்
இப்பகுதியில் உள்ள அற்புதமான காட்சிகள் ரோமானியர்களின் வலிமையை மற்றும் பெருத்தன்மையை கொண்டுள்ளன. இந்த கொலோசியம் பகுதி சுற்றுலாப் பயணிகள் மற்றும் புகைப்படம் எடுப்பவர்களால் ஈர்க்கப்படுகிறது. இங்குள்ள பனிப்பாறைகள் பார்க்கின்றவர்கள் அதிகமான புகைப்படங்களை எடுப்பார்கள். உலகத்தில் புகைப்படம் எடுப்பதற்கு இது ஒரு சிறந்த இடமாக உள்ளது. இந்த இன்ஸ்டாகிராம் மூலமாக உலகத்தில் உள்ள அரியவகை காட்சிகளையும் காண முடிகிறது.