Menu
have us call you back!
Name*
E-mail address*
Phone number*

அழகான அரண்மனை

பெருமை வாய்ந்த கோட்டைகள், அழகான அரண்மனைகள், அரசிகள் ஆகியவற்றை நாம் நினைவுகூறும் போது நம் நினைவிற்கு வருவது ராஜஸ்தான். அரசர்கள் ஆண்ட பூமியாக கருதப்படுகிறது. அங்குள்ள வசதியான கட்டிட அமைப்புகள், விருந்தோம்பல் பண்பு, ஒற்றுமை, ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த அனுபவத்திற்கு நம்மை இழுத்து செல்கிறது.

1.தாஜ் அரண்மனை

இந்தியாவின் மிகவும் அழகு வாய்ந்த, பார்ப்பவர்களை பிரமிக்க வைக்ககூடிய பிரமாண்டமான அரண்மனைகளுள் ஒன்று. இதனை பார்க்கும் போது சூரியன் நடுவில் இருக்கிறமாதிரி காட்சியளிக்கும். இக்காட்சியினை பார்ப்பவர்களின் இதயத்தினை கவர்ந்திழுக்கும். இங்கு வரும் பயணிகளை வரவேற்கும் ரோஜாவின் இதழ்கள், ஊஞ்சல்கள், வரவேற்பதற்கான அழகு ஆகியவை இத்தாஜ் அரண்மனையின் அழகை பிரதிப்பலிக்கிறது. இவ்விழகினை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. ராஜஸ்தானின் அரண்மனைகளின் மணிமகுடமாக விளங்குகிறது.

2.லலித் லட்சுமி விலாஸ் அரண்மனை

லலித் லட்சுமி விலாஸ் அரண்மனை பராத்பூரில் உள்ளது. 100 ஆண்டுகள் மிக பழமைவாய்ந்த அரண்மனை. 1994ம் ஆண்டு பாரம்பரியமிக்க அரண்மனையாக அறிவிக்கப்பட்டது. வசதியான செல்வந்தர்களின் குடும்பங்கள். இந்த அரண்மனையில் வசதிப்பதற்கு ஏற்ப அனைத்துவிதமான வசதி அமைப்புகளை கொண்டுள்ளது. உதய்பூரில் உள்ள மிக அற்புதமான அரண்மனைகளில் ஒன்று.

3.அமத் ஹவாலி

பிச்சோலா மேற்குகடற்கரை ஓரத்தில் அரண்மனை அமைந்துள்ளது. மஹாராஜா ஜெகட் சிங் ஜி என்பவரால் கட்டப்பட்டது. ராஜபுத்திரர்களின் கட்டிடக்கலைக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இங்குள்ள இடமைப்புகள், ஆடம்பரத்துடன் கூடிய வசதி வாய்ப்புகள் விருந்தோம்பல், பயணிகளை வரவேற்ப்பது, ஆகியவற்றில் விருதுகள் பெற்ற அரண்மனை. இதன் உள் அமைப்புகள், அங்குள்ள உணவுகள் இந்தியா மற்றும் சீனாவின்
; உணவுமுறையை பின்பற்றப்படுகிறது.

4. போகேடா அரண்மனை

போகேடா அரண்மனைக்கு செல்பவர்களுக்கு வீட்டில் இருப்பதே போன்றே ஒருவிதமான உணர்வு ஏற்படும். அப்படிப்பட்ட வரவேற்பு. இவ்வரண்மனை பழமை வாய்ந்த நகரமான உதய்பூர் நடுவில் மறைந்திருக்ககூடிய ஒரு இடமாகும். இவ்வரண்மனையை சுற்றி பூங்காக்கள் அமைந்துள்ளது. எப்பொழுதும் ஒரு அமைதியான இடமைப்பை கொண்டது.

5.பிச்சோலா அரண்மனை

மேற்கத்திய பிச்சோலா கரையோரத்தில் பிரமாபூரி. தீவுகளில் அமைந்திருக்கும். மிகவும் பழமை வாய்ந்த அரண்மனையாகும். இவ்வரண்மனைக்கு எதிர்புறம் பழைமையான ஜெகதீஷ் கோயில் அமைந்துள்ளது.

6.கண்கார்வா அரண்மனை

கண்கார்வா குடும்பத்தினரின் அரண்மனையாக விளங்கி வந்தது. கடந்த 180 ஆண்டுகளாக கண்கார்வா குடும்பத்தின் விலைமதிக்க முடியாத ஓர் சொத்தாக உள்ளது. இவ்வரண்மனை கண்கார்வா குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அரண்மனைக்கு செல்பவர்களுக்கு சொர்க்கத்திற்கு சென்ற உணர்வு ஏற்படுகின்றது. இங்கு வரவேற்பு மற்றும் விருந்தோம்பல் கொடுக்கப்படுகிறது.

7.ஹோட்டல் உதய்ப்பூர்

உதய்கர் அரண்மனை 150 ஆண்டுகளாக பாதுகாத்து நடத்;தி வருகின்றனர். பாரம்பரியமான. அரண்மனைக்கு செல்பவர்களுக்கு ஒருவிதமான உணர்வு ஏற்படுகின்றது. இங்கு பழைமையான வரலாற்று சுற்றுப்புறங்கள் உடையது. பார்ப்பவர்களுக்கு இங்கே வசிக்க வேண்டும் என்ற ஓர் எண்ணம் ஏற்படுகிறது.

8. ஜெய்வான அரண்மனை

மி;ர்வா மஹாரானாஸில் ஒருவரான தகூர் ஜெய்வானா அவர்கள் வசித்து வந்த அரண்மனையாகும். இவ்வரண்மனை 24 அறைகளை கொண்டது. இந்த அரண்மனை தீவுகளில் இருந்து ஆரவல்லி மலைத்தொடருக்கு நீர்வீழ்ச்சி விழும் காட்சியை காண முடியும். அரண்மனையின் மேற்பரப்பு (மேற்கூரை) பார்க்கின்ற அனைவரையும் ஒரு மறக்க முடியாத அனுபவத்தையும் எதனுடனும் ஒப்பிட்டு பார்க்க முடியாத, மனதிற்கு இதமான ஒரு சிறந்த அனுபவத்தை தருகிறது. ராஜஸ்தானின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *