Travel Blog by Thomas Cook India

மும்பையில் ~ஷாhப்பிங் செய்வற்கான சிறந்த 5 இடங்கள்

மும்பை என்று நினைத்தாலே, நம் மனதிற்கு தோன்றுவது மோசடிகளும். வசீகரிக்கும் அழகுகளும், சினிமாக்களும் போன்றவையாகும். சர்வதேச அளவில் பிரமாண்டமான கவரும் தொழிற்சாலைகளை கொண்ட, பெரிய நகரமாக விளங்குகிறது. மகாராஷ்டிராவின் தலைநகரமாக மும்பை இருந்தாலும், இது ஒரு சிறு உலகமாக விளங்குகிறது. மும்பை ஒரு கூட்டமான பகுதி. ஏனெனில் இங்கு அதிகளவில் கடைகள், நடைபாதை வியாபாரிகள் உள்ளனர். இதை நாம் பார்க்காமல் சென்றால் நம் பயணம் முழுமையடையாது.
உலகில் அழகு வாய்ந்த நகரங்களில் பாரிஸிக்கு அடுத்தப்படியாக மும்பை இரண்டாம் இடத்தில் உள்ளது. சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள வேண்டுமென்று திட்டமிட்டால், இந்தியாவை நோக்கி விடுமுறை பயணம் செய்யுங்கள். இந்தியாவின் மும்பை ஒரு முக்கியமான இடத்தை பெறுகின்றது. வீட்டை அலங்கரிக்க பயன்படும் பொருட்கள் அனைத்தும் வாங்குவதற்கு சிறந்த இடமாக விளங்குகிறது. இது மும்பையின் அடுத்த சிறப்பம்சமாகும். இங்கு நாம் எந்த தயக்கமுமின்றி பொருட்களை வாங்கலாம். நம் கவனத்திற்காக கூவி கூவி விற்கும் வியாபாரிகளிடம் பேரம் பேசும்காட்சி அதிக அளவில் காணப்படுகிறது. நாம் ஓய்வெடுக்கும் நேரத்தில் இதை பற்றி சிந்தித்தால் வேடிக்கையாக இருக்கும். ஆனால், அமைதியாக காணப்படும் பழைய தெரு சந்தைகளில் விலைகளை குறைக்க முடியாது. மும்பையில் உள்ள ஷாப்பிங் செய்வதற்கான இடங்களை பற்றி பார்ப்போம்.

1. சார் பஜார்

உலகில் எவ்வளவு பஜார் இருந்தாலும், மும்பையில் உள்ள இப்பஜார் புகழ்பெற்றதாக விளங்குகிறது. சலசலப்பான கனவு நகரத்தில் இருக்கக்கூடிய சார் பஜார் ஒரு பழைமையான காதலர்களின் சொர்க்கமாகும். பேருக்கு ஏற்றார் போல இங்கு விற்கக்கூடிய பொருட்களும் தனித்துவம் வாய்ந்தது. நீங்கள் பேரம் பேசுவதில் வல்லவராக இருந்தால் இங்கு பொருட்கள் வாங்குவது உங்களுக்கு கைவந்த கலையாகும்.

2. சாவேரி பஜார்

மும்பையில் உள்ள சாவேரி பஜார், பெயருக்கு ஏற்றார்ப் போல நிறைய கடைவீதிகளை கொண்டுள்ளது. இந்த பஜார் அணிகலனை பற்றி தெரிந்து கொள்ள சிறந்த இடமாக விளங்குகிறது. இங்கு தங்கம், வெள்ளி, வைரம் முதலிய விலைமதிப்பற்ற பொருட்கள் வாங்குவதற்கு சிறந்த இடமாக விளங்குகிறது. டி.பி.சி மற்றும் டேனி~pக் கடைகளில் தரம் வாய்ந்த பொருட்கள் உள்ளது. திருமணம் மற்றும் திருவிழாக்களுக்கு தேவையான ஆபரணங்களை வாங்குவதற்கு மும்பையில் உள்ள சாவேரி பஜாரை அணுகவும்.

3. ஃபேஷன் ஸ்ட்ரிட்

மும்பையில் உள்ள ஃபேஷன் ஸ்ட்ரிடில் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் தேவையான ஆடைகளை, நவீன காலத்திற்கு ஏற்றவாறும் மற்றும் நாட்டு கலாச்சார முறைக்கு ஏற்றவாறும் ஆடைகள் அனைத்தும் இங்கு கிடைக்கும். இது மும்பைவாசிகளின் மிகவும் சிறப்புமிக்க இடமாக திகழ்கிறது. இது நவீன காலத்திற்கு ஏற்ற ஆடைகள் அனைத்தும் நியாயமான விலையில் வாங்குவதற்கும் ஏற்ற இடமாக உள்ளது. ஷhப்பிங் செய்யவிரும்புகிறவர்கள் மும்பையில் உள்ள ஃபேஷன் ஸ்ட்ரிட் கடையை கண்டிப்பாக பார்க்க வேண்டும். மும்பையிலேயே வரவு செலவு திட்டம் பார்த்து பொருட்கள் வாங்ககூடிய சிறந்த இடங்களில் ஃபேஷன் ஸ்ட்ரிட் கடையும் ஒன்றாகும்.

4. லிங்கிங் ரோடு

இது பந்த்ராவில் அமைந்துள்ளது. இவ்விடம் பேரம் பேசி பொருள் வாங்குவோருக்கு ஏற்ற இடமாக உள்ளது. இங்கு நவீன ஆடைகள், காலணிகள் மற்றும் உபரி பாகங்கள் போன்ற அனைத்து வகையான பொருட்களையும் பெற்றுக்கொள்ள முடியும். இங்கு சில்லறை வியாபாரிகளும், சாலையோரங்களில் பொருட்களை விற்கிறார்கள். இந்த லிங்கிங் ரோடு வௌ;வேறு விதமான பொருட்கள் உள்ளன. இவ்வாறான பொருட்கள் வாங்குவதை விட்டுவிட்டு உணவகம் அல்லது கபே ஆகிய இடங்களில் நேரத்தை செலவிடலாம். இங்கு அனைத்து விதமான பொருட்களையும், முழுமையான ஷhப்பிங் செய்வதற்கு மும்பை சிறந்து விளங்குகிறது.

5. கொலாபா காஸ்லே

இந்த பகுதி உணவு பிரியர்களுக்கும், ஆடை வடிவமைப்பாளர்களுக்கும் சொர்க்கமாக திகழ்கிறது. இங்கு, கைப்பை, கையால் செய்யப்பட்ட பொருட்கள், புத்தகங்கள், காலணிகள், உபரி பாகங்கள் போன்ற அனைத்து வகையான பொருட்களை பெற்றுக் கொள்ளமுடியும். இந்த தெரு சந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒருவகையான மகிழ்ச்சியை தருகிறது. இந்த தெருக்கடைகளில் பைகள், பணப்பைகள், காலணிகள், கைத்திறன் கொண்டு உண்டாக்கப்பட்ட பொருட்கள் இங்கு கிடைக்கும். புதிய பொகமெயின் பாணியில் ஆடைகள், குளிருக்கு தேவையான ஆடைகள் ஆகியவற்றை இங்கு வாங்கலாம். எப்பொழுது பேரம் பேசுதல் சலிப்பூட்டுகிறதோ அப்போது அங்குள்ள தெருக்களில் உள்ள சிறிய கடைகளில் உள்ள உணவை ருசிக்கலாம். இல்லையெனில் தாங்கள் உட்காரவும், இளைப்பாறவும் பிரபலமான லியோபோல்ட் கபே நோக்கி பயணிக்கலாம்.