அமெரிக்கா முழுவதும் பயணம் செய்வதற்கு வழிகாட்டுதல்
அமெரிக்காவில் உள்ள இயற்கை காட்சிகள், கடற்கரைகள், பனிசூழ்ந்த மலைப்பகுதிகள், அழகான புல்வெளிகள் ஆகியவற்றை பார்க்கும்போது உண்மையாகவே விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழித்திட உலகத்திலேயே அற்புதமான இடமாக அமெரிக்கா உள்ளது. இந்த அழகான அமெரிக்க நாடு, ஒரு எல்லையிலிருந்து மற்றொரு எல்லைகள் வரை 3000 மைல்களை கொண்டுள்ளது. அமெரிக்காவில் காணவேண்டிய இடங்கள் எண்ணிலடங்கதேவை. இந்த பயணத்தை எங்கிருந்து தொடங்கலாம் என்பதற்கு இதொரு வழிகாட்டியாக அமைகிறது.
1. நியூயார்க்
அமெரிக்காவின் பெரிய ஆப்பிள் நகரம் என்று அழைக்கப்படுகிறது. அதை பற்றி அதிகம் சொல்லத்தேவை இல்லை. நமக்கே தெரியும். ஒருவேளை தெரியவில்லை என்றால் நியூயார்க் நகரில் உள்ள சுதந்திர தேவிசிலை மற்றும் பேரரசு கட்டிடம் ஆகியவற்றின் சிறப்பை உணரும்போது வியப்படைந்து விடுகிறோம். ஒரு சிறந்த அமைதியான இடத்தை விரும்பினால் சென்ட்ரல் பார்க் அல்லது கட்டிடக்கலை அருங்காட்சியகம் ஆகும்.
2. நயகரா நீர்வீழ்ச்சி
அமெரிக்காவில் இருக்கக்கூடிய பிரபலமான நீர்வீழ்ச்சிகளில் நயகரா நீர்வீழ்ச்சியும் ஒன்று. இது மூன்று நீர்வீழ்ச்சிகளை கொண்டுள்ளது. இந்நீர்வீழ்ச்சிகள் சர்வதேச எல்லைகளான கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் நடுவில்
நியூயார்க்கில் அமைந்துள்ளது. இந்நீர்வீழ்ச்சினை நிலத்தில இருந்து பார்த்தாலும், அருகில் இருந்து பார்த்தாலும் பனிமூட்டங்களுக்கு நடுவில் இருக்கக்கூடிய அற்புதமான காட்சியை அளிக்கிறது. 1846ல் இருந்து இங்கு வரக்கூடிய சுற்றுலாப்பயணிகளுக்கு நம்பமுடியாத அனுபவத்தை தருகிறது. அமெரிக்கா சுற்றுலா வரலாற்றிலே பழமையான ஒன்றாக உள்ளது.
3. ஹர்சி சாக்லெட் தொழிற்சாலை
உலகத்திலே சாக்லெட்களை பெரியளவில் உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலைகளில் இதுவும் ஒன்று. நிறைய விதமான இனிப்பு பொருட்களை ஹர்சி சாக்லெட்க்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தினமும் ஹர்சி சாக்லெட்டுடன் நாளை தொடங்குங்கள். இத்தொழிற்சாலையின் வழிகாட்டி மூலமாக சுற்றி பார்த்தால், நீங்களும் ஹர்சி சாக்லெட் நிறுவனத்தை உருவாக்கலாம். நான்கு பரிணாம நிகழ்ச்சியை பார்த்து இந்த நிறுவனத்தின் ரகசியத்தை அறியலாம். மன அமைதியை விரும்புகிறவர்களுக்கு ஹர்சி தோட்டமும், மகிழ்வுந்தை விரும்புகிறவர்களுக்கு பழமைவாய்ந்த மோட்டார் வாகன அருங்காட்சியகம் சிறந்ததாக உள்ளது.
4. சான்பிரான்சிஸ்கோ
சான்பிரான்சிஸ்கோ பற்றி சொல்லத்தேவை இல்லை. இந்த நகரத்தை ஆய்வு செய்தால், 83 ஆண்டுகள் பழைமையான கோல்டன் கேட் பாலத்தை தாண்டிதான் செல்லவேண்டும். சான்பிரான்சிஸ்கோ நகரத்திலிருந்து 20கி.மீ மைல் தொலைவில் பார்த்தால் க{ரிஸ்லி சிகரம் இயற்கை அழகோடு மறைந்திருக்கிறது. அங்கே சிலநேரம் காத்திருந்தால் சூரியன் மறையும் அழகு நம் கண்களுக்கு விருந்தாகும். பிரபலமற்ற அல்காட்ராஸ் தீவு வழியாக படகு சவாரி செய்து திரும்பு போது கண்ணை கவருகிற விருந்தாக அமைகிறது.
5. லாஸ் விகாஸ்
லாஸ் விகாஸ் என்ற இடம் அமெரிக்காவின் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. ஏனெனில் இங்கு சூதாட்டம் அதிக அளவில் பரவியுள்ளது. இங்கு பயணம் செய்தால் மாப் அருங்காட்சியகம், அணுசோதனை அருங்காட்சியகம், நியான் அருங்காட்சியகம் மற்றும் புகழ்பெற்ற பின்பால் மண்டபம் இவையனைத்தையும் பற்றி அறிந்து கொள்ளமுடியும். ரொம்ப மனஅழுத்த நேரத்தில் இந்த நகரத்திலிருந்து அடுக்குமண்டல சவாரி சென்றால் நம் மனஅழுத்தம் நீங்கிவிடும். நம் பயணத்திட்டத்தில் லாஸ் விகாஸ் இடத்திற்கு போகும் பொழுது நாணயங்கள் எல்லாம் ரூபாயாக மாறுகிறது.