Travel Blog by Thomas Cook India

ராஜஸ்தானின் எட்டு நிகழ்வுகள்

ராஜஸ்தான் இந்திய கலாச்சாரத்தின் மறுஉருவமாய் விளங்குகிறது. இன்றைய நவீனமயமாக்கலின் காலக்கட்டத்தில் ராஜஸ்தான் மட்டும் அதனுடைய பண்பாடு விருந்தோம்பல், கலாச்சாரம் பறைசாற்றி வருகிற போதிலும் ராஜஸ்தானை பார்க்க விரும்புவதற்கு இன்னொரு முக்கிய காரணம் அங்கு கொண்டாடப்படக்கூடிய திருவிழாக்கள் மக்களை கவர்ந்திழுக்கக்கூடிய ஒன்றாக விளங்குகிறது.

1. ஹங்கார் திருவிழா

சிவன் மற்றும் பார்;வதி நல்லொழுக்கத்தின் அடையாளமாகவும் பழம்பெரும் வடிவமாகவும் உள்ளது. சிவனையும் பார்வதியையும் மையப்படுத்தியே இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவானது உதய்ப்பூர், ஜெய்ப்பூர், மான்ட்வா பகுதிகளில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் முக்கியமாக கொண்டாடப்படுகிறது. பெண்கள், இளைஞர்கள் கலாச்சார ஆடைகளை அணிந்து நடனம், பாடுதல், இறைவனிடம் வேண்டுதல் ஆகியவை சிவனையும் பார்வதியையும் மையப்படுத்தியே நடைபெறுகிறது. இளைஞர்கள் வருங்கால கணவனுக்காகவும், திருமணமான பெண்கள் தங்கள் கணவர்களின் பாதுகாப்புக்காகவும் அந்த திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவன் பார்வதி மணக்கோலத்தில் காட்சியளிக்ககூடிய இ;த்திருவிழாவானது இரண்டு வாரங்கள் நடைபெறுகின்றது.

2. மீவார் திருவிழா

மீவார் திருவிழாவானது இலையுதிர்காலத்தை வரவேற்பதற்காக கொண்டாடப்படக்கூடிய திருவிழாவாகும். ராஜஸ்தானில் குறிப்பாக உதய்ப்பூர் நகரம் முழுவதிலும் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. ஹங்கார் திருவிழா, மேவார் திருவிழா இவ்விரண்டு திருவிழாக்களுமே பெண்களின் நடனத்தை மையப்படுத்தியே கொண்டாடப்படுகிறது. அனைத்துப் பெண்களும் ஆடை ஆபரணங்கள் அணிந்து சிவன் பார்வதி போன்றே காட்சியளிக்கின்றனர். ராஜஸ்தானின் பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக நகரம் முழுவதும் ஊர்வலமாக பெண்களின் நடனத்துடன் பிச்சோலா ஏரியை அடைந்து அந்த ஏரிகளில் படகில் சிவனையும், பார்வதியையும் வலம்வருகின்றனர்.

3. ஜோத்பூர் பாலைவன திருவிழா

ஜெய்சல்மெர் நகரத்திலிருந்து 24கி.மீ தொலைவில் உள்ள சம்சன்டோன் பகுதியில் உள்ள ஜோத்பூர் நகரத்தில் ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படும் பாலைவன திருவிழாவாகும். ராஜஸ்தானில் உள்ள அனைத்து ஒட்டங்களும் இவ்விடத்தில் ஒன்றுகூட செய்து பல்வேறு நிகழ்ச்சிகளை செயல்படுத்துவார்கள். இத்திருவிழாவானது மூன்று நாட்கள் நடைபெறும். இத்திருவிழாவானது ராஜஸ்தானின் கலாச்சாரம், கட்டிடக்கலை, இசை, நடனம், பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் அனைவராலும் ஈர்க்கப்படக்கூடிய ஒட்டகப் பந்தயங்கள், பொம்மலாட்டங்கள், தீ நடனங்கள், நாட்டுபுறப்பாடல்கள் அரசர்கள் மற்றும் அரசிகளைப் பற்றி உணர்வு பூர்வமான பாடல்கள் ஆகியவை அனைவரையும் கவர்ந்த இழுக்கிறது. ராஜஸ்தானில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாவாக இருக்கிறது.

4.புஸ்கா திருவிழா

இத்திருவிழாவானது உலகளாவிய கொண்டாடப்படக்ககூடிய முக்கிய விழாவாகும். நவம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது. இப்பகுதி மிகவும் அற்புதமான ஒன்றாக விளங்குகிறது. இங்கு ஆயிரகணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி புஸ்கார் ஏரியில் நீராடிஈ பிரம்மனை வழிபடுவார்கள். புஸ்கார் பகுதியில் ஓட்டக வியாபாரிகள், விவசாயிகள், ஒட்டகங்களை விற்கவும், வாங்கவும் கூடிய ஒரு முக்கிய நிகழ்வாக விளங்குகிறது. புஸ்கார் திருவிழாவில் உள்ள நடனங்கள் பாடல்கள் நெருப்பு சம்பந்தப்பட்ட விளையாட்டுகளை காணும் போது ராஜஸ்தானின் சுற்றுலா மையமாக விளங்குகிறது.

5.மார்வார் திருவிழா

மார்வார் திருவிழாவில் உள்ள நடனங்கள், இசைகள் மார்வார் பகுதி மக்களுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது. இத்திருவிழாவானது ஜோத்பூர் அக்டோபர் மாதம் கொண்டாடப்படுகிறது. ஜோத்பூரின் கட்டிடக்கலை, கலாச்சாரத்தை பிரதிப்பலிப்பதாக உள்ளது. இந்த மார்வார் திருவிழாக்களிலே மான் திருவிழா மிக முக்கியமான திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

6.டீஜ் திருவிழா

பருவநிலை காலத்தை ஓட்டி ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்படும் திருவிழவாகும். இத்திருவிழாவானது ஜெய்ப்பூர் மாநகரில் பிரமாதமாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவானது பார்வதி கடவுளை வண்ணமயமாக அழகுப்படுத்தி நடனங்கள் பாடல்களுடன் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

7. ஜெய்ப்பூர் திரையரங்க திருவிழா

ஜெய்ரங்க தேசிய திரையரங்க விழா ஜெய்ப்பூரில் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவானது ஒருவாரகாலமாக நடைபெறும். இந்தியாவின் முழுவதும் உள்ள முக்கிய திரையரங்குகளின் செயல்பாடுகள், திரையங்கள் காட்சிகள் இங்கு நடைபெறும். உலகத்திலே இத்திரையரங்கள் இயக்குநர்கள் ஒன்றுகூடி திரையரங்க காட்சிகளை பிரதிபலிக்கக்கூடிய சிறந்த இடமாக ஜெய்ப்பூர் திகழ்கிறது.

8. கோடைகால திருவிழா

ராஜஸ்தானின் மவுண்ட்அபு மலையில் கோடைகால திருவிழா கொண்டாடப்படுகிறது. இக்கோடைகால திருவிழாவானது ஜீன் மாதம் கொண்டாடப்படுகிறது. கலாச்சார நிகழ்வுகள், இசை, நடனங்கள் மலைவாழ் மக்களையும், அதன் சுற்றுப்புறங்களையும் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய ஒரு விழாவாக கொண்டாப்படுகிறது