கடுமையான உச்சி வெயில் நேரமாக இருந்தாலும், அதை அப்படியே குளிர்ந்த சூழ்நிலையை மாற்றும் இடமாகும். இந்தியாவில் சில இடங்களை ஆய்வு செய்வோமானால், இந்த இடமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏற்கனவே, லட்சத்தீவு மற்றும் கா~;மீர் பற்றிய சுற்றுலா அனுபவங்களை பற்றி அறிந்திருந்தோம். இங்கு கண்களுக்கு விருந்தளிக்ககூடிய இடங்கள் பல உண்டு. ஹிமாச்சல் பிரதேசம், ஒரு அற்புதமான இடம் என்பதை சில அனுபவத்தால் காணமுடிகிறது. இங்கு நிறைய ஆச்சரியமூட்டும் இடங்களும், நிறைய மலைத்தொடர்களும் உள்ளன.
1. ஸ்பிட்டி
ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மலைப்பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். ஸ்பிட்டி என்பதை நடுநிலம் என்று கூறலாம். இப்பகுதி இந்தியா மற்றும் திபெத் நடுவில் அமைந்துள்ளது. புகைப்படம எடுப்பவர்களின் கனவு இலக்காக உள்ளது. மதச்சார்ந்த துறவிகள் தங்கும் இடமாக அமைந்துள்ளது. அழகு வாய்ந்த கிராமங்கள், நீர் நிலைகள் மற்றும் கம்பீரமான மலைத்தொடர்கள் இவையெல்லாம் காண்பதற்கு சிறந்த இடமாகும். மலைப்பகுதியில் மலைஏறுதலை செய்யும் போதும் அதனை காணும் போதும் சிறந்த அனுபவத்தை அளிக்கிறது. பின் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில் அழிந்து வரக்ககூடிய இனமாக சிறுத்தைகள் மிகுந்து காணப்படுகிறது.
2. டல்ஹெளசி – இந்தியாவின் சுவிட்சர்லாந்து
பிரிட்டிஷ் ஆட்சிபுரிந்த காலத்தில் மிகவும் ஈர்க்கக்கூடிய இடங்களில் மீதமுள்ள விக்டோரியா மகாராணி வீடுகள், மிக அற்புதமான காட்சிகள், இயற்கை அழகுகள் அனைத்தும் மக்களால் காணவேண்டிய சிறந்த இடமாகும். மலையேற்றத்திற்கும், சாகசங்களுக்கும் சிறந்த இடமாகவும் விளங்குகிறது.
3. கசவ்லி
மக்கள் கூட்டம் இல்லாத ஒரு பகுதியாகவும், ஓய்வு எடுப்பதற்கு ஏற்ற இடமாகவும் அமைந்துள்ளது. இது ஒரு மலை பிரதேசம் ஆகும். இந்த மலைத்தொடர், ஹிமாச்சலில் உள்ள சிம்லாவில் உள்ளது. கசவ்லி நகரமானது வாழ்க்கைக்கு தேவையான ஓய்வை கொடுக்கிறது. இப்பகுதி ஆப்பிள் தோட்டத்தையும், பசுமையுடைய புல்வெளிகளையும், பள்ளத்தாக்குகளையும் மற்றும் பல கட்டிடக்கலைகளையும், மனஅமைதிற்கு ஏற்ற சுற்றுப்புற சூழ்நிலைகளையும் கொண்டுள்ளது.
4. தர்மசாலா – தலாய் லாமாவின் இருப்பிடம்
தர்மசாலா பற்றி சொல்ல வேண்டுமென்றால், இப்பகுதியைச் சுற்றி அழகு வாய்ந்த ஹிமாலாயா மற்றும் கிர் காடுகள் உள்ளன. இது கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம். ஹிமாச்சலப் பிரதேசத்தில் மலையேற்றம் செய்வதற்கு சொர்க்கம் போல திகழ்கிறது.
5. குஃப்ரி – அழகான பனி உறைவிடம்
சிம்லாவில் இருந்து 20கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அழகுமிகுந்த வலுக்குபாறைகளை கொண்டுள்ள இடமாகும். இங்குள்ள சாதகமான காலநிலை மற்றும் அழகுவாய்ந்த இடங்கள் கோடைக்காலத்தில் காண்பதற்கு சிறந்த இடமாகும். ஹிமாச்சலில் உள்ள ஒரு பழமையானதாகவும், மலையேற்றத்திற்கான சிறந்த இடமாக குஃப்ரி விளங்குகிறது. இங்கு பிப்ரவரி மாதத்தில் குளிர்கால விளையாட்டு நிகழ்ச்சிகள் நடக்கும். இங்கு சென்றால் நமது மனஅழுத்தம் உடனடியாக குறையும். இங்கு உயிரியல் பூங்காவை காண்பது மிகச்சிறந்த ஒன்றாகும். மேலும் டோபோகிங், கார்ட்டிங் செல்லுதல், விலங்கியல் பூங்கா, பொழுதுபோக்கு பூங்கா ஆகியவை பார்க்கூடிய இடங்களாகும்.
6. செயில் – உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்
இந்த கிரிக்கெட் மைதானம் 72 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இந்த பகுதி, பிரமாண்டமான பட்டியாலாவின் கோடை கால தலைநகரமாக அமைந்துள்ளது. இப்பகுதியை பைன் மற்றும் தேவதாரு மரங்களும், சட்லஜ் பள்ளதாக்கின் பின்பகுதி பனியுறைந்த உச்சங்களை தொலைவில் நின்று பார்ப்பதற்கு அழகாக உள்ளது. இங்கு மலையேற்றத்திற்கு சிறநத இடமாக உள்ளது. மேலும், செயில் வனவிலங்கு சரணாலயம் மற்றும் மலையில் உள்ள காளி காதிபா கோயில் பார்க்கவேண்டிய இடங்களாகும்.
7. குளு – இயற்கையை விரும்புகிறவர்களின் சொர்க்கம்.
ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மலைகளில் கடவுளின் பள்ளதாக்கு பார்க்க வேண்டிய இடமாகும். பீஸ் ஆற்றங்கரையில் இருந்து 1230மீ தொலைவில் அமைந்துள்ள குளு பகுதி, புது தம்பதிகள் உல்லாசப் பயணம் மேற்கொள்வதற்கான இடமாகவும், அட்டீரினல் சுரப்பி சுரப்பதற்கான சிறந்த இடமாகவும் உள்ளது. வெள்ளை நீர் படகு சவாரி, பனித்தரை வழுக்கு விளையாட்டு, இவ்விரண்டிலும், பாராகிளைடிங் செய்யமுடியும். ஹிமாலயா தேசிய பூங்காவில் சில வனவிலங்குகளை காணமுடியும்.ஆன்மீக உணர்வை பெறுவதற்கு கீர்கங்காவில் உள்ள வெள்ளை நீரூற்றுகள், பிஜ்லிமகாதேவ் கோவில், இரகுநாதர் கோவில் ஆகியவற்றை இங்கு பார்க்கமுடியும்.
8. சிம்லா – மலைகளின் ராணி
ஹிமாச்சலில் உள்ள அதிகமான மலைகளில் சிம்லா மலைகள் குறிப்பிடவிட்டாலும், இந்த மலை பகுதி பிரிட்டிஷ் ஆட்சிபுரிந்த காலக்கட்டத்தில் கோடைகால தலைநகரமாக இருந்தது. மிக சிறந்த மலைப்பிரதேசமாக உள்ளது. அழகு மிகுந்த இடமாகவும் மற்றும் பிரமிக்கதக்க வகையில் உள்ளன. மலையை சுற்றிலும் குன்றுகளும், மலையேறுதலுக்கு சிறந்த இடமாகவும், ஆற்றில் மீன் பிடித்தல் மற்றும் தண்ணீர் விளையாட்டுகள், சன்ட்விச் நீர்வீழ்ச்சிகள் இவை அனைத்தும் இருப்பதால் சிம்லா அனைவராலும் விரும்பக்கூடிய இடமாக உள்ளது.
9. சோலன் – காளான்களின் தலைநகரம்
இங்கு விளையாட்டு மற்றும் மலையேறுதல் அதிகமாக காணப்பட்டாலும், சற்றும் அமைதியான நேரங்களையும், காணமுடியும். ஆகையால் சோலன் ஒரு பகுதியாக உள்ளது. இந்த அழகு மற்றும் ஈர்க்கக்கூடிய மலை பிரதேசம் ஆகும். ஹிமாச்சலில் உள்ள இந்த சோலன் பகுதி, மட்டில் சிகரத்திற்கும், கரோல் சிகரத்திற்கும் மத்தியில் அமைந்துள்ளது. இந்நகரம் சிகப்பு தங்க நகரம் என்றும் மற்றும் காளான்களின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் தக்காளி மற்றும் காளான்களின் உற்பத்தி அதிகமாகும். இங்கு ஒடைகள் மற்றும் ஆறுகள் சரியான சுற்றுபுறங்களை கொண்டது. மதுவடித்தலுக்கு சிறந்த இடமாக உள்ள இப்பகுதியை 1855ம் ஆண்டு தடைசெய்யப்பட்டதாகும். ஆசியாவில் முதன்முதலாக மதுவடித்தல் பகுதியை தடைசெய்தது இப்பகுதியேயாகும்.
10. கின்னார் – கடவுளின் நகரம்
இங்குள்ள ஆறுகள், மலைகள், தோட்டங்கள் மற்றும் அழகுவாய்ந்த இடங்கள் இவை அனைத்தும் வரவேற்கதக்க ஒன்றாகும். கின்னார் பள்ளதாக்கு முழுவதும் மேகங்கள் சூழந்து காணப்படுகிறது. கின்னார் கைலாச~pல்உள்ள பரிகர்மா பகுதி மலையேறுவதற்கு சிறந்த இடமாகும். சிவனின் இருப்பிடமாக கின்னார் கைலாசம் விளங்குகிறது. மேலும் இங்கு அதிகமான கோவில்களை காண முடியும். ராகம் சிட்டுக்குளம் வனவிலங்கு சரணாலயத்தில் வனவிலங்குகளை காணமுடிகிறது.
விடுமுறை நாட்களை சிறப்பாக கழித்திட, ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மலை தொடர்கள் நமக்காக காத்து கொண்டு இருக்கிறது.