Travel Blog by Thomas Cook India

விடுமுறை நாட்களில் இந்தியாவில் பயணம் செய்யக்கூடிய இடங்கள்

விடுமுறை நாட்களில், நம்முடைய நாட்களை நாம் பயனுள்ள இயந்திரங்களுடன் செலவழிக்கிறோம். அற்புதமான கைப்பேசிகளுடனும், டேப், சிறிய மடிக்கணினிகளுடனும் பெரும்பாலான நேரத்தை செலவழிக்கிறோம். விடுமுறை நாட்களில் கூட அதிலிருந்து விடுபட முடியவில்லை. மின்னணு திரையை அதிகமாக பார்ப்பதால் தலைக்கு ஒரு பாரமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் நம்மை சுற்றியுள்ள சிறு சிறு சிறந்த பொருட்களை காண தவறவிடுகிறோம். இதிலிருந்து வெளிவர இந்தியாவில் உள்ள காணவேண்டிய இடங்களையும், அழகான இயற்கையையும் விடுமுறை நாட்களை செலவழிக்க வேண்டும்.

1. அழகான பந்திப்பூர் தேசிய பூங்கா – கர்நாடகா

நாகர்கோல் மற்றும் முதுமலை தேசிய பூங்காவை ஒட்டியே அமைந்துள்ளது. இது வனவிலங்குகளை காண்பதற்கு ஒரு செழிப்பான இடம். இதில் கம்பீரமான புலிகளும், உள்ளன. பந்திப்பூரில் புலிகள் மட்டுமல்லாமல் அதிக அளவில் மற்ற வனவிலங்குகளும் உள்ளன. காட்டில் சவாரி செய்வது ஒரு அற்புதமான நிகழ்வு. இங்கு யானைகள், மான்கள், சிங்கவால் குரங்குகள், ஒருவகை மான்கள் மற்றும் கம்பீரமான புலிகள் உள்ளன. சவாரி செய்வது ஒரு புத்துணர்ச்சி ஊட்டுகிற ஒரு அனுபவத்தை அளிக்கிறது. காட்டில் முகாமிட்டு தங்கும் நிகழ்வு வாழ்நாளில் அடைய முடியாத அனுபவத்தை தருகிறது.

2. அந்தமான் நிக்கோபார் தீவு ஒரு தனித்தன்மை

இழந்ததைவிட, இன்னும் சிறப்பாக எதையும் பெற வேண்டும் என்றால் பழைமையான அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு செல்ல வேண்டும். இத்தீவில் உள்ள கவர்ந்திழுக்ககூடிய காட்சிகளை பார்க்கும் போது இயற்கையின் மீதுள்ள பசியை தீர்ப்பதாக அமைகிறது. அந்தமான் தீவுக்கு செல்வது ஒரு முழுமையான ஓய்வை அளிக்கிறது. இந்த தீவின் அசலான அழகை பார்க்கும் போது நம்மை வியக்க வைக்கிறது. இங்கு கடலில் உலா செல்வது மூலம் நமக்கு வாழ்நாள் அனுபவத்தை அளிக்கிறது. நீர் விளையாட்டுக்கள், ஸ்கூபா டைவிங், தனிமைப்பட்ட நீல் மற்றும் கீராஸ் தீவிவை பார்வையிடும்போது, ஒரு நல்ல அனுபவத்தை தருகிறது.

3. தார் பாலைவனம்

விடுமுறை நாட்களில் சிறந்த அனுபவத்தை தரக்கூடிய இந்தியாவில் உள்ள முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்றாகும். இங்குள்ள ஜெய்சல்மார் பகுதியில் ஒட்டகச்சவாரி மேற்கொண்டால் அற்புதமான அனுபவத்தை தருகிறது. கைப்பேசியை பயன்படுத்தாமல், இங்கு நடைபெறகூடிய கதைகள், பாடல்கள், ஆடல்கள் போன்றவைகளை நம் உணர்வால் அனுபவிக்க முடிகிறது. இங்கு இரவு நேரத்தில் போகும் முகாமில் இருந்து சூரியன் மறையும் நிகழ்வை காணும் காட்சி அற்புதமானது. 180 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள பழங்கால தொல்பொருள்களை அகால் பாசில் பூங்காவில் காணமுடியும். ஜெய்சலமார் கோட்டையின் கட்டிடக்கலை மற்றும அழகு மிகச் சிறந்ததாகும்.

4. மிஸ்டிகல் லடாக்

இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த இடங்களில் லடாக் பகுதி ஒன்றாகும். மற்ற எல்லா சுற்றுலாத்தலங்களை விட இப்பகுதி தனித்தன்மை வாய்ந்த இடமாகும். ஆன்மீக துறவிகளின் இருப்பிடமாகவும் உள்ளது. ஆன்மீகத்திற்கேயான ஒரு தனித்தன்மை வாய்ந்த இடமாகும். தன்னையே மறந்து ஒரு ஆழ்ந்த அமைதியையும், தியானத்திற்கு சிறந்த இடமாக அமைகிறது. இப்பகுதியை பார்க்காமல் சென்றால், நம்முடைய சுற்றுலாப் பயணங்கள் நிறைவடையாது. லடாக் பகுதியுள்ள ஹெமிஸ், திக்கேஸ், ஃபட்டல், போன்ற மடங்களை பார்க்க தவறக்கூடாது. துறவிகள் பிரார்த்தனை செய்வதால் உள்ளார்ந்த அமைதியை பெற முடிகிறது. இங்குள்ள அழகான நெபுரா பள்ளதாக்கை காணமுடியும்.

5. ஆலாப்புழா பேக் வாட்டர்ஸ்

ஆடம்பரமான படகு மூலம் கேரளாவில் உள்ள உப்பங்கழிகளை, கப்பல் மேல்தளத்திலிருந்து பார்க்கும் போது அழகாக காட்சியளிக்கிறது. இந்த உப்பங்கழிகளை சுற்றிலும் தாவரங்கள் மற்றும் விலங்குகள், ஆடம்பரமான கடல் உணவுகள், தென்னந்தோப்புகள், பரந்த நெல் வயல்கள், ஆகியவற்றை பார்க்கும்போது சிறந்த அனுபவத்தை தருகிறது. இந்தியாவில்; உள்ள விடுமுறைகால சுற்றுலா இடங்களில் கேரளா சிறந்த இடமாக விளங்குகிறது. இந்த ஆடம்பரமான படகில் ஒரு இரவு தங்குவது என்பது கனவில் இருக்கின்ற மாதிரியான அனுபவத்தை தருகிறது. இங்குள்ள பகுதியில் உள்ள உணவுகள் சுவையானதாக உள்ளது. நறுமணப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கான கடைகள் உள்ளன.

6.ரான் ஆப் கட்ச்

கற்பனை என்பது ஒன்றுமில்லை! இன்னும் அதிகம் கற்பனை செய்யவேண்டும். இந்தியாவில் உள்ள ஒரு பழமையான மற்றும் மிகப்பெரிய உப்பால் ஆன பாலைவனம் தான் ரான் ஆப் கட்ச் ஆகும். இங்கு அக்டோபர் மாதங்களில் தண்ணீர் வரத்து மிகக்குறைவதால் அவ்விடம் வறண்ட இடம் போல் காட்சியளிக்கும். இங்கு முகாம் இட்டு தங்குவது சிறந்த அனுபவமாகும். இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களில் இங்கு செல்வது மிகச்சிறந்த அனுபவத்தை தருகிறது.
காலாடுன்கார் பகுதியுள்ள அந்த அழகையை காண்பது சிறப்பு வாய்ந்ததாகும். ஒரு இரவு முழுவதும் முகாமிட்டு தங்குவது சிறந்த வாழ்நாள் அனுபவத்தை தருகிறது.

7. மேற்கு தொடர்ச்சி மலை

மேற்கு தொடர்ச்சி மலையில் பலவிதமான பல்லுரியினங்களின் இருப்பிடமாக விளங்குவதால் ஐ.நா வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நினைவுச்சின்னமாக அங்கிகரீக்கப்பட்டுள்ளது. இந்த மலைத்தொடர் 1600கி.மீ அடர்த்தியை கொண்டுள்ளது. நம்முடைய கண்களுக்கு விருந்தளிக்கிறது. மேலும் ஆயிரம் வகையான தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சினங்கள் ஆகியவற்றை பார்க்கும் போது உணர்ச்சிமிக்க ஒன்றாக விளங்குகிறது. இக்காடுகளில் நடைபயணம் செய்வது சிறந்த அனுபவத்தை தருகிறது. பருவநிலை காலங்களிலும் இப்பகுதி அழகானதாக காட்சியளிக்கிறது. பருவநிலைக்காலங்களில் ஒவ்வொரு பகுதிகளிலும் ஏற்படக்கூடிய நீர்வீழ்ச்சியை காணமுடியும்.

8. மேகலாயா

மேகலாயாவில் அற்புதமான மற்றும் அழகான குகைகள் உள்ளன. கிரெம் மம்லுஹ்ஹ், கேம் ஃபைலட், கிரம் லாட்ரா, மிசோரம், மௌசேமா, சிஜ்யு இவையனைத்தும் இந்தியாவில் காணவேண்டிய பழமையான இடங்களாகும். இயற்கை அழகு, அற்புதமான மலைக்குன்றுகள் மற்றும் வியப்பூட்டும் அழகு வாய்ந்த பள்ளத்தாக்குகள், அற்புதமான தாவர விலங்குகள் இவையெல்லாம் சேர்ந்து தான் அற்புதமான காட்சியளிக்கிறது. குகைகள் அற்புதமான சாகச செயலாக உள்ளது. இங்கு முகாமிட்டு தங்குவது மறக்கமுடியாத அனுபவத்தை தருகிறது.

9. சிக்கிம்

சாகசங்கள் விரும்புகிறவர்களுக்கு ஒரு சொர்க்கமாகவும், விடுமுறை கால சுற்றுலாவிற்கான சிறந்த இடமாகவும் சிக்கிம் விளங்குகிறது. கம்பீரமான மலை தொடர்கள், மலையேற்றத்திற்கான ஒரு அற்புதமான இடமாகும். புத்த மத கலாச்சாரம் சிக்கிமில் அதிகம் காணப்படுகிறது. போமாஸ் மற்றும் துக்பாஸ் போன்றவை இங்கு கிடைக்ககூடிய சிறந்த உணவுப் பொருட்களாகும்.

10. ரிஷிகேஷ்

இங்கு யோகா கலைகள், தியானங்கள், சுயபரிசோதனைகள் செய்வதற்கான சிறந்த இடமாக விளங்குகிறது. ரிஷிகேஷ்p பகுதி உத்ரகாண்ட் சுற்றுலா தலங்களில் சிறந்ததாகும். இராஜாஜி தேசிய பூங்காவை பார்வையிடுவதற்கு திட்டமிடவேண்டும். மன அழுத்தத்தில் இருந்து வெளிவர முடியும். தூய காற்றில் தொலைத்தூரம் நடந்து செல்வது சிறந்த அனுபவத்தை தருகிறது.