பூட்டான் இந்தியாவில் இருந்து எப்படி அடைவது?
உலகில் உள்ள நாடுகளின் மகிழ்ச்சியை கொண்டு அதன் முன்னேற்றத்தை அளவிடப்படும் போது மகிழ்ச்சியான நாடாக விளங்குவது பூடான் ஆகும். உலகத்தில் எல்லா இடங்களிலும் சுற்றுலாத்தலங்கள் இருந்தாலும் பூடானில் உள்ள பழமையான மடங்கள், அங்குள்ள மலை ஏறுதல் ஆகியவற்றை பார்ப்பதற்காகவே இங்கு பயணம் செய்யலாம். இன்றைய காலகட்டங்களில் பூடான் சுற்றுலாத்தலமாக விளங்கியபோதும் அங்குள்ள இயற்கை வளங்கள், சுற்றுப்புறச்சூழல்கள், கலாச்சாரம் பண்பாடுகள் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவிலிருந்து பூடானுக்கு செல்வது இரண்டு வழிகள் உள்ளன.
1. சாலைப்போக்குவரத்து வழியாக செல்லலாம். 2. விமான போக்குவரத்து வழியாக செல்லலாம்.
இந்திய மக்கள் பூடான் செல்வதற்கு வெளிநாட்டு பயண அனுமதிசீட்டு தேவையில்லை. மாறாக, தேர்தல் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு இருந்தால் போதுமானது.
விமான போக்குவரத்து வழியாக பூடான் செல்வது
பூடானில் ஒரே ஒரு பன்னாட்டு விமானநிலையம் உள்ளது. அதன் பெயர் பரோ பன்னாட்டு விமானநிலையம் ஆகும். இது டெல்லி, கௌகாத்தி, மும்பை, பாக்தோறா ஆகிய விமானநிலையங்களை இணைக்கிறது. கொல்கத்தா விமானநிலையத்திலிருந்து பரோ பன்னாட்டு விமானநிலையத்திற்கு நேரடியாக செல்லலாம். கொல்கத்தாவிலிருந்து
பூடான் செல்வதற்கு அடிக்கடி விமான போக்குவரத்து உள்ளது. கொல்கத்தாவுடனும் மற்றும் பாக்தோறாவுடனும் ஒப்பீடுகையில் டெல்லி மற்றும் மும்பையிலிருந்து குறைவான போக்குவரத்து வசதியுள்ளது. பூடான் செல்வதற்கு டர்க் ஏர் தேசிய நிறுவன அலுவலகத்தின் மூலமாக பதிவு செய்யவேண்டும். நேரடியாக நேபாளத்திற்கு சென்றால், காத்மாண்ட் விமானநிலையத்திலிருந்து நேரடியாக பரோ பன்னாட்டு விமான நிலையத்திற்கு செல்லலாம். அதாவது காத்மாண்ட் விமானநிலையத்திலிருந்து பரோ பன்னாட்டு விமானநிலையத்திற்கு செல்லும் போது உலகிலேயே நான்கு உயரமான மலைகளை கடந்து செல்லும் காட்சியை பார்க்கும்போது மனதிற்கு உற்சாகத்தை தருகிறது. பூடானில் உள்ள மற்ற உள்நாட்டு நகரங்களை இணைப்பதற்கு உள்நாட்டு விமானநிலையங்கள் உள்ளன.
சாலை போக்குவரத்து வழியாக பூடான் செல்வது
இந்தியாவிலிருந்து பூடானுக்கு சாலைபோக்குவரத்து வழியாக செல்வதற்கு ப்ஹீன்ட்சோலிங் இடத்திலுள்ள இம்மிகிரே~ன் அலுவலகம் ராயல் பூடான் அரசாங்கத்திடம் அனுமதியை பெறவேண்டும். இந்தோ-பூடான் எல்லைப் பகுதிக்கு எதிர்புறத்தில் ஜெய்யோன் பகுதி அமைந்துள்ளது. ஆனால் இந்த அனுமதியை வைத்து கொண்டு இந்திய சுற்றுலா பயணிகள் பரோ முதல் திம்பு வரை செல்லலாம். இது தவிர மற்ற நகரங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் சிறப்பு அனுமதியை பூடான் அரசாங்கத்திடம் இருந்து பெறவேண்டும். இந்த அனுமதியை கல்கத்தாவில் உள்ள அயல்நாட்டு பிரதிநிதி அலுவலகத்திலிருந்து பத்து அல்லது பன்னிரண்டு நாட்களுக்குள் பெற்று கொள்ளலாம். இந்தியாவிலிருந்து நேரடியாக
பூடான் செல்வதற்கு மூன்று எல்லைகளை கடக்க வேண்டும். (ப்ஹீன்ட்சோலிங்-ஜெய்யோன் எல்லை, கெலெப்ஹீ,
சம்டருபிஜோங்கஹோ எல்லைகள்) ஆனால் அனைவரும் ப்ஹீன்ட்சோலிங்-ஜெய்யோன் எல்லை வழியாக சுலபமாக
பூடானுக்கு செல்கின்றனர். பயணசெலவு கடினமாக இருந்தால் உள்ளுர் பேருந்து, மகிழ்வுந்துகளில் பூடானுக்கு பயணம் செய்யலாம். பாக்தோறா பகுதியிலிருந்து, ப்ஹீன்ட்சோலிங் பகுதிக்கு பயணம் செய்ய நான்கு மணி நேரம். ப்ஹீன்ட்சோலிங்
பகுதியிலிருந்து திம்புவிற்கு பயணம் செய்ய ஆறு மணிநேரம். தனியார் பேருந்து வசதிகளும் பாக்தோறா பகுதியிலிருந்து உள்ளது. இது புதிய ஜால்பாய்குரி மற்றும் சிலிக்குரி வழியாக தேசிய நெடுஞ்சாலை எண்31 வழியாக திம்புவை அடையலாம்.