Menu
have us call you back!
Name*
E-mail address*
Phone number*

கல்லூரி மாணவர்கள் கல்லூரி தொடங்குவதற்கு முன் இந்தியாவில் காணவேண்டிய இடங்கள்

இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் பெரும்பாலும் ஒரு வருடம் முடிந்து அடுத்த வருடம் தொடங்கும்முன், மாணவர்கள் செயல்திட்டங்கள், ஒப்படைப்பு முறைகள், மனஅழுத்தங்களால் ஏற்படக்கூடிய தூக்கமின்மை ஆகியவற்றால் பாதிப்பு அடைகின்றனர். இந்த மனஅழுத்தங்களுடன் அடுத்த வருடத்தை தொடங்குவதற்கு முன், இந்தியாவில் உள்ள சிறந்த இடங்களுக்கு பயணம் செய்யவேண்டும். இப்பயணத்தின் போது கல்லூரி மாணவர்கள் மனஅழுத்தத்திலிருந்து விடுபட முடியும்.

1. ரிஷிகேஷ்; – (நதி படகு)

உலகிலுள்ள ஆறுகளில் சில ஆறுகள், கங்கை நதியில் கலக்கின்றது. நதிகளில் படகு பயணம் செய்வது சிறந்த அனுபவத்தை தருகிறது. அவ்வாறு செல்லும் போது தண்ணீரில் ஏற்படக்கூடிய வெள்ளை நுரைகளை காணும் காட்சியை பார்க்கும் போது மனதில் உள்ள அழுத்தம் குறைகிறது. ரிஷிகேஷ்pல், கங்கை ஆற்றுடன் மற்ற ஆறுகள் ஒன்று சேரக்கூடிய அற்புதமான காட்சியினை காணும் நாம் அதற்கு அடிமையாகிவிடுகிறோம். இச்செயல்பாடுகள் மூலம் சிறந்த மகிழ்ச்சியை பருவநிலை காலங்களில் அனுபவிக்க முடியும்.

2. அந்தமானிலுள்ள ஸ்கூபா டைவிங்

அந்தமானில் உள்ள வண்ணமயமான பவளப்பாறைகள், சிறந்த அனுபவங்கள் மற்றும் அமைதியும், இதுவரை பார்த்திடாத ஒன்றாகும். அந்தமானில் உள்ள இந்த ஸ்கூபா டைவிங்கை தவறாமல் பார்க்கவேண்டும். ஸ்கூபா டைவிங் செய்யவதற்கான சிறந்த இடங்களில் அந்தமான் நாடு ஒன்றாகும். ஆழ்கடல் நீச்சல் ஒரு மிகுந்த அனுபவத்தை தருகிறது. கடற்கரைகள், ஆழமான சறுக்கங்கள், ஆகியவற்றை இங்கு காணமுடியும். இந்தியபெருங்கடலில் உள்ள தீவுகளிலே மிக பிரபலமான மற்றும் ஆழமான தீவு. இந்திய பெருங்கடலின் ஆழத்தை பற்றி ஆராயவதற்கு ஒரு மகிச்கிறந்த தீவாகும்.இது போர்ட் பிளேயர்-ல் இருந்து 50கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கண்டுபிடிக்கபடாத டைவிங் சைட்ஸ் மற்றும் ஆழ்கடல் நீச்சலுக்கு இந்தியாவில் பல இடங்கள் இருந்தாலும், அந்தமான் சிறப்பு வாய்ந்த இடமாகும்.

3. டார்ஜிலிங் – டாய் ட்ரெயின்இ

ந்த பயணம் ஆர்வம் உடையவர்களுக்கு வரலாற்றில் சிறந்த ஒன்றாகும். இந்த டார்ஜிலிங்லில் உள்ள டாய் ட்ரெயின் 1800ம் ஆண்டுகளில் இருந்து செயல்பட்டு வருகிறது. டார்ஜிலிங்கில் உள்ள மலை பகுதி முதல் அடிப்பகுதி வரை உள்ள பகுதிகளை இணைக்ககூடிய போக்குவரத்து நிபந்தனையின் பெயரில் துவங்கப்பட்டது. உலக பண்பாட்டு கலாச்சார நிறுவனத்தால் ஏற்கொள்ளப்பட்டது. நம் கண்களுக்கு ஒரு மாயமான காட்சிகளை, இந்த டாய் ட்ரெயின் மூலம் காணமுடிகிறது. டீசல் இன்ஜின்கள் மூலமாக செல்லக்கூடிய ரயில் விரைவாக செல்கிறது. ஆனால், அதன் அழகியை பிரதிபலிப்பதில்லை. டார்ஜிலிங்கிலில் உள்ள ரயில் மெதுவாக செல்வதனால் காட்சிகளை காணக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

4. ஆலப்புழை ஒரு பார்வை (கிழக்கு நாடுகள்)

இந்த பகுதி கிழக்கின் வெனிஸ் என்று அழைக்கப்படுகிறது. மாணவர்கள் கல்லூரி துவக்கத்திற்கு முன் நாம் பார்வையிட வேண்டிய இடம். ஆனால் நம் ஆராய்ச்சியை முழுமையாக தொடர இயலாது. ஆலப்புழை நதியின் அழகும், பெப்பர்டு கால்வாய்களும், நெல் வயல்களும், தேங்காய் தோட்டங்களும் இயற்கையாகவே மனதிற்கு அமைதியான அனுபவத்தை தருகிறது. நேரு படகுபோட்டி வருடந்தோறும் ஆலப்புழை இடத்தில் நடைபெறும். அது மட்டுமல்லாமல் ஆலப்புழை கடற்கரைகள், கிருஷ்;ணாபுரம் கோட்டையும், தக்கலை அருங்காட்சியகம், பழம்பெரும் பொக்கிஷங்களும், இந்து மதத்தின் வழிமுறைகளும், பழைமையான இலக்கியங்களையும் காணமுடியும்.

5. கோவா

கோவா சுற்றுலாப்பயணம், ஒரு கல்லூரி சுற்றுலாப் பயணத்திற்கு பொருத்தமான ஒன்றாகும். நண்பர்களுடன் குழுவாக சேர்ந்து, கடற்கரைக்கு சென்று மது அருந்துதல், கடற்கரை உணவகங்கள் இந்த பயணத்தில் அனுபவிக்கின்றனர். இங்கு கடற்கரையில் உள்ள அற்புதமான காட்சிகள், பாராசெய்லிங், பணனா போர்ட் ரைடு ஆகியவற்றை இங்கு காணமுடியும். வாகட்டுர் கடற்கரை, ஆஞ்சுனா கடற்கரை, பாகா கடற்கரை, கலங்கேட் கடற்கரை, பேக்மலோ கடற்கரை போன்றவை பிரபலமான கடற்கரைகள் ஆகும். நீச்சல் உடைகளுடன் இந்தியாவின் சுற்றுலா தளங்களில் கோவா முக்கிய பங்கினை வகிக்கின்றது

6. மணலி

மணலிக்கு பயணம் செய்வது என்பது சிறந்த மனநிறவை அளிக்கிறது. இதன் பயணம் அங்குள்ள சாகச அனுபவங்களை பார்க்கும்போது கனவுபோல காட்சியளிக்கிறது. நமது நண்பர்களுடன் கால்வாயின் பகுதிக்கு செல்வது, அங்குள்ள காட்சிகளை பார்ப்பது, சிறந்த அனுபவத்தை தருகிறது. நமது செயல்திறன்களை ஈடுபடுத்தி, வெள்ளை நீர் பாய்ச்சல், பனிமலை ஏற்றங்கள், மலைகள் மீது அமைக்கப்பட்ட முகாம், ஆறுகள், மலைக்குன்றுகள், 10 நிமிடங்களில் தரக்கூடிய இன்பங்கள், பாராகிளைடிங், பசுமைக்குன்றுகள், ஆறுகளை கடந்து செல்லுதல், பாறைகளில் ஏறுதல், செங்குத்தான மலைகளிலிருந்து கீழே இறங்குதல் போன்ற சாகசங்களை இங்கு காண முடியும்.

7. பாண்டிசேரி

பாண்டிசேரி பயணம் அழகான அனுபவத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தியாவில் பார்க்கக்கூடிய முக்கிய இடங்களுள் இதுவும் ஒன்றாகும். யூனியன் பிரதேசங்களை அடையக்கூடிய இலக்கை எந்த ஒரு இடர்பாடும் இன்றி அடையமுடிகிறது. இங்குள்ள போக்குவரத்து இயற்கையோடு ஒன்றிய ஒரு வியக்க வைக்கக்கூடியதாக உள்ளது. பாண்டிசேரிக்கு சைக்கிளில் செல்லும்போது உள்ள சிறந்த அனுபவம், மக்களுக்கு பிரெஞ்சு பகுதியில் உள்ள அழகான கட்டிடக்கலையின் அனுபவத்தை அளிக்கிறது.

8. மேகலாயா

மேகலாயா, ஸ்காட்ஸின் இயற்கைகாட்சிகளும், இந்தியாவின் அழகையும் ஒரு கலவையாக கலந்த சிறந்த இடமாக விளங்குகிறது. இந்த மாநிலம் மேகங்களின் உறையிடமாக கருதப்படுகிறது. இது உலகிலேயே குளிர்ந்த இடமாக கருதப்படுகிறது. மேகலாயா சாந்தமான இயற்கை சூழல், அமைதியான நீர்வீழ்ச்சி, பாம்பு போன்ற ஆறுகள், பசுமையான புல்வெளி சரிவுகள் போன்றவற்றால் சூழப்பட்டுள்ளது. இந்த இடம் காட்டுவிலங்குகள், முக்கியமாக யானைகள், புலிகள், தங்கப்பூனைகள், குரங்குகள், பருந்து, பறவைகள் ஆகியவற்றை இங்கு காணமுடியும். இயற்கையின் சிறப்புகள் மட்டும் இதன் சிறப்பு இல்லை. மேகலாயாவின் சிறப்புகளில் குழிப்பந்தாட்ட மைதானமும் ஒன்றாகும். மேகலாயாவின் மற்றொரு மாணிக்கம் ரூட் பிரிட்ஜ், இந்த பாலம் 15 வருடங்களுக்கு முன்னாதாகவே உருவானதாகும். இயற்கை விரும்புகிறவர்கள், சாகசம் செய்பவர்களுக்கு ஒரு பிரபலமான இடமாக அமைகிறது. எல்லாருக்கும் ஏதேனும் ஒரு அனுபவத்தை தரக்கூடியது. இது பலத்துறைகளிலும் திறமையுடைய மற்றும் தன் இலக்கின் மேல் ஒரு ஈர்ப்பு உள்ளவர்களுக்கும் அனுபவத்தை கல்லூரி தொடங்குவதற்கு முன் அளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *