Menu
have us call you back!
Name*
E-mail address*
Phone number*

மைசூரில் உள்ள சிறந்த இடங்கள்

நகரம் முழுவதும் அரண்மணைகள், பூங்காக்கள், ஏரிகள், சந்தன மரங்கள், பட்டுகள், திகைப்பூட்டும் வரலாற்று இடங்கள், கலாச்சாரங்கள் மற்றும் இயற்கை வளங்கள், இயற்கையின் பொக்கிஷங்களை அடக்கிய நகரமாக விளங்குகிறது. இந்நகரம் முழுவதும் செழிப்பான வரலாற்று பாரம்பரியமிக்க சிறப்புக்களையும், நவீன வாழ்க்கை முறைகளையும் கொண்டுள்ளது. அடுத்த வருகையின் போது மைசூரில் உள்ள சிறந்த இ;டங்களை காண்பதற்கு திட்டமிடுங்கள்.

1. மைசூர் அரண்மணை

ஏழாம் நூற்றாண்டில் மைசூர் பகுதியை ஆட்சி செய்த உடையார் வம்சத்தின் ஆட்சியாளர்களின் அரண்மணையாக விளங்கியது. இந்த அரண்மணை செழுமைக்கும், ஆடம்பரத்திற்கும் சான்றாக விளங்குகிறது. இந்த அரண்மணையில் உள்ள ஒவ்வொரு கட்டிடக்கலையும் திறமையான கட்டிடக்கலை நிபுணர் மற்றும் கைவினை அறிஞர்கள் கொண்டும் உருவாக்கப்பட்ட, நம்பமுடியாத, தலைச்சிறந்த இடங்களில் ஒன்றாக விளங்குகிறது. தசரா பண்டிகையின் போது அரண்மணை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, யானைகளுடன் நகரை வலம் வருகின்றனர். மேலும் அரண்மணையை சுற்றிலும் மாலை நேரங்களில் ஒளியூட்டக்கூடிய 98000 ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அக்டோபர் முதல் மார்ச் வரை காலங்களில் தான் இந்த அரண்மணையை சுற்றி பார்க்க ஏற்ற காலமாக உள்ளது.

2. பிருந்தாவன் பூங்கா

மைசூருக்கு சென்றாலே, இந்த பிருந்தாவன் தோட்டத்தை கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்று அனைவரும் பரிந்துரை செய்வார்கள். கிரு~;ணசாகர் அணைக்கட்டிற்கு அடுத்தப்படியாக இந்த பிருந்தாவன் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவானது அழகான நீரூற்று நிகழ்ச்சிகளால் அழகுபடுத்தப்பட்டும், இயற்கையான அழகுகளாலும் அமைக்கப்பட்டிருக்கும். இப்பூங்காவில் தம்பதிகளாக படகில் சவாரி செய்வது மகிழ்ச்சியாக இருக்கும். பழந்தோட்டங்களுக்கு மத்தியில் நடைபயணம் செய்வது மனதிற்கு இதமான ஒன்றாகும். இப்பூங்காவில் இசையுடன் நீரூற்று நிகழ்ச்சியை காணும்போது மக்களை கவர்ச்சிப்படுத்தும்.

3. சாமுண்டி மலை

மைசூரில் புறநகர் பகுதியில் அமைந்துள்ள இந்த சாமுண்டி மலை பார்க்க வேண்டிய சிறந்த இடமாகும். இந்த மலையின் மேல் சாமுண்டிஸ்வரி கோவிலில் உள்ள சிலை பார்ப்பதற்கு அழகாக உள்ளது. இப்பகுதியை கண்டிப்பாக பார்வையிடக்கூடிய சுற்றுலா இடமாக விளங்குகிறது. இங்குள்ள 7 கோபுரங்கள், 7 பொற்கலசங்கள் மற்றும் கட்டிடக்கலைகள், 5அடி உயரமான நந்தி சிலைகள் ஆகியவற்றில் தனித்தன்மை பெற்றவையாகும்.

4. பிலோமினா தேவாலயம்

வரலாற்றில் அழிந்து போன கோத்திக் இனத்தவர்களின் பாணியில் தேவாலயம் கட்டப்பட்டது. தெற்காசியாவில் உள்ள சிறந்த சுற்றுலா மையங்களில், மைசூரில் உள்ள இந்த பிலோமினா தேவாலயம் ஒன்றாக விளங்குகிறது. இங்கு கிறிஸ்து பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள புகைப்படங்கள், கண்ணாடியில் ஓவியங்களாக வரையப்பட்டடுள்ளன. தேவாலயத்தின் தாழ்வாரத்தில் முக்கியமான பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது.ஆன்மீகத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

5. இரயில்வே அருங்காட்சியகம்

மைசூரில் உள்ள இரயில்வே அருங்காட்சியகம், டெல்லிக்கு அடுத்தப்படியாக இரண்டாவது பெரிய அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகத்தில் பழைய எஞ்சின் இயந்திரம் மற்றும் நீராவி இயந்திரம் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் மைசூரில் உள்ள சிறந்த இடங்களில் ஒன்றாக உள்ளது. இந்த அருங்காட்சியக வளாகத்தில் சவாரி செய்வதற்கு ஏற்றவாறு சிறிய ரயில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அருங்காட்சியகத்தில் அரச வம்சத்திற்குரிய உணவறைகள், சமையலறைகள், கழிவறைகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படுகிறது.

6. மெழுகுவர்த்தியால் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம்

இந்தியாவின் மூன்றாவது பெரிய கலை அருங்காட்சியமாக விளங்குகிறது. இந்த அருங்காட்சியகத்தில் நூற்றுக்கு மேலான மெழுகுவர்த்தி சிலைகள் மற்றும் 300 இசைக்கருவிகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் வௌ;வேறு விதமான இசைக்கருவிகள், இசை மேளங்கள், கேளிக்கையான இசைக்கூத்துகள், மரபு சார்ந்த இசைகள், பாறைகள், பஞ்சாபி பாங்ரா மேலும் பல வகையான இசைக்கருவிகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. உலகத்திலுள்ள பிரபலமான இசை அறிஞர்களின் பாராட்டுறைகள் இங்கே இடம் பெற்று இருக்கின்றன.

7. கரன்ஜி ஏரி

கரன்ஜி ஏரி கர்நாடகாவிலே பெரிய ஏரியாகவும், அழகான மற்றும் சாந்தமான இடமாகும். கர்நாடகவில் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஏரியை சுற்றிலும், வீடுகளை விட, 70 வகையான பறவைகளின் கூண்டுகள் தான் அதிக அளவில் உள்ளன. இங்கு வரக்கூடிய பார்வையாளர்களுக்கு நுழைவுக்கட்டணம் 10ரூபாயாகும். வாரத்தின் செவ்வாய் கிழமை தவிர, மற்ற நாட்களில் பார்வையிடலாம்.

8. மைசூர் விலங்கியல் பூங்கா

 

மைசூரில் உள்ள சிறந்த வனவிலங்கு பூங்காக்களில் இதுவும் ஒன்றாகும். இங்குள்ள விலங்கின காட்சிகள் அற்புதமாகவும், மனதிற்கு உணர்ச்சியூட்டுகிற ஓர் அனுபவத்தை தருகிறது. இந்தியாவிலே மிகப்பழமையான விலங்கியல் பூங்காவாகும். 1892ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தேசிய பூங்காக்கள், அரண்மணைகள், ஏரிகள் மேலும் பல இடங்கள் மைசூரில உள்ள் சுற்றுலா மையங்களாகும். இந்த விலங்கின பூங்காவில் அரிய வகை அழிந்து போகினற் வெளிநாட்டுப்பறவை இனங்கள் உள்ளன. இந்த விலங்கியில் பூங்காவிற்கு செவ்வாய் கிழமை விடுமுறையாகும். மற்ற வார நாட்களில் செயல்படும்

9. ஜாக்மோகன் அரண்மனை

அதிர்ச்சி தரக்கூடிய இந்த அரண்மனையானது அரசக்குடும்பத்தினரின் உறைவிடமாக இருந்துள்ளது. ஆனால், பின்நாட்களில் கலையரங்கமாக மாற்றப்பட்டுள்ளது. மைசூரில் உள்ள பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும். இந்த கலையரங்கம் முழுவதும் நிறைய விலைமதிக்ககூடிய, மனித கைத்திறன் கொண்டு உண்டாக்கப்பட்ட பொருட்கள், கலை படைப்புகள், பழம்பெரும் பொக்கிஷங்கள், தென்னிந்தியாவின் தலைச்சிறந்த படைப்புகள் இடம்பெற்றுள்ளன.ராஜரவிவர்மாவின் எண்ணெய் ஓவியங்கள் மற்றும் எஸ்.ஜி. கெல்டங்கரின், ஒரு பெண் விளக்கு வைத்துக்கொண்டிருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

10. மரபு ஆராய்ச்சி அருங்காட்சியகம்

இது மைசூரில் உள்ள பல்கலைகழக வளாகத்தில் இயற்கை வனப்புடைய நிலத்தில் அமைந்துள்ளது. இந்த அரண்மனைக்கு முன்னால் ஆடம்பரமான கட்டிடக்கலை, அற்புதமான படைப்புகள், கலையாற்றல் உள்ள புகழ்மிக்க சிகரம் ஆகியவை இடம்பெற்றுள்ளது. மேலும் இப்பூங்காவில் வசீகரமான நாட்டுப்புறக்கலைகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைகழக வளாக முழுவதும் அழகாக காட்சியளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *