Travel Blog by Thomas Cook India

ஊட்டியில் பார்வையிட வேண்டிய 18 இடங்கள் – (மலைகளின் ராணி)

ஊட்டி கண்களுக்கு அழகான செயல்பாடுகளாலும், பயணிகளின் மகிழ்ச்சியையும் நிறைவு செய்கிறது இடமாக விளங்குகிறது. ஊட்டியில் அமைந்துள்ள இடங்களை பார்வையிட திட்டமிடும் செயல் கடினமாக இருந்தாலும், கண்களுக்கு விருந்தளிக்ககூடிய காட்சிகளையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அக்காட்சிகளின் தொகுப்பையை காண்போம்.

1.ரயில் பொம்மை

இது ஊட்டியில் அழகான பகுதியாக உள்ளது. இதனை நீலகிரி மலை ரயில்பொம்மை நிலையம் என்று கூறுவர். ஊட்டியில் உள்ள சுற்றுலா இடங்கள் பயணிகளை ஈர்க்ககூடிய ஒரு சிறந்த இடமாக உள்ளது. 1899-ம் ஆண்டில் இருந்து பார்வையாளர்கள், காடுகள், சுரங்கப்பாதைகள், பழவகைகள், பனிமூட்டங்கள், பறவைகள் ஆகியவற்றை பார்வையிடுகின்றனர்.

2.ஊட்டி ஏரி

இது ஒரு முறையற்ற செயற்கை ஏரி, இது ட வடிவமைப்பில் உள்ளது. இந்த செயற்கை ஏரி, ஜான்சுலிவனால் ஊட்டி மலைப்பகுதியிலிருந்து வரக்கூடிய ஒரு சிறிய ஓடையை ஏரியாக உருவாக்கியுள்ளார். ஊட்டியின் மாணிக்கம் என்று இப்பகுதியை சொல்லலாம்.

3.ஊட்டியிலுள்ள தாவரவியல் பூங்கா

இந்த தாவரவியல் பூங்கா 1848ம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு தோட்டக்கலைத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. பல வகையான பூக்களையும், செடி கொடிகளையும், ஒழுங்கற்ற கிளை தண்டுகளையும், பூங்காவையும் கொண்ட வியக்க வைக்ககூடிய இடமாக உள்ளது.

4.ஊட்டி ரோஜாத்தோட்டம்

ரோஜாக்களை பெரியளவில் உற்பத்தி செய்யக்கூடிய இடமாக அமைந்துள்ளது. இங்கு வளரும் ரோஜாக்கள் விரும்பக்கூடியதாக இருப்பதால் சந்தையில் அதிக விலையை பெற்றுள்ளது. ஊட்டியில் உள்ள இடங்களில் சிறந்த இடமாக இது கருதவில்லை. இருப்பினும் பார்வையாளர்கள் அவசியமாக இங்கு வருகை தருவர்.

5.நூல் தோட்டம்

இந்த நூல் பூங்கா அழகான செயற்கைரீதியான பூக்களாலும், தாவரங்களாலும் தொகுக்கப்பட்ட பூங்காவாக அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டனி ஜோசப் என்ற கலைஞர் இந்த பூங்கா உருவாவதற்கான கருத்தை 12 ஆண்டுகள் முயற்சி செய்து உருவாக்கியுள்ளார்.

6.தொட்டபெட்டா சிகரம்

ஊட்டி மலைகளின் உயர்ந்த சிகரமாக விளங்குகிறது. இது கடல்மட்டத்தலிருந்து 2,623மீ உயரத்தில் அமைந்துள்ளது.

7.டால்பின் மூக்கு

இது ஒரு இயற்கை தளமாக உள்ளது. இங்கு நீண்டு கொண்டிருக்கிற பாறைகள் டால்பின் மூக்கு போன்று காட்சியளிக்கிறது. மலை ஏறுவதற்கு சிறந்த இடமாக விளங்குகிறது.

8.கல்ஹத்தி நீர்வீழ்ச்சி

இந்த நீர்வீழ்ச்சி, பறவைகளை பார்வையிடக்ககூடியவர்களுக்கு சொர்க்கமாக விளங்குகிறது. இந்த பகுதியின் சுற்றுப்புறங்கள் அமைதியான மற்றும சாந்தமான சூழலை கொண்டுள்ளதால் ஒரு சிறிய பயணம் மேற்கொள்ள சிறந்த இடமாக உள்ளது. ஊட்டியில் உள்ள இந்த முக்கியமான தூய ஏரியை பெலிக்கல் என்று அழைப்பர். பார்வையாளர்களை வியக்கவைக்கும் இடமாக கல்ஹத்தி நீர்வீழ்ச்சி உள்ளது.

9.எமரால்ட் ஏரி

எமரால்ட் ஏரி அமைதியான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இப்பகுதி சுற்றுலாவிற்கும், மீன் பிடிப்பதற்கும் சாதகமான இடமாக உள்ளது. இந்த ஏரியை சுற்றிலும் தேயிலை தோட்டமும், தேயிலை உற்பத்தி செய்யக்கூடிய இடமும் அமைந்துள்ளது.

10.புலிமலை

ஊட்டியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. தொட்டபெட்டாவின் அடிப்பகுதியிலும், ஊட்டியிலிருந்து கிழக்காக 6கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அதிகமான அளவில் மலை ஏறுவதற்கு சிறந்த இடமாகவும் உள்ளது.

11.காமராஜ் சாகர் ஏரி

இந்த ஏரி புறநகரில் அமைந்துள்ளது. இதை சுற்றிலும் புதர்செடிகளும், மூலிகை செடிகளும் அமைந்துள்ளதால், சினிமா மற்றும் படப்பிடிப்பின் ஒரு முக்கியமான இடமாக கருதப்படுகிறது. இங்கு மீன்பிடி தொழிற்சாலை அமைந்துள்ளதால் இந்த இடம் சிறப்புபெற்ற இடமாகவும், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

12.கோத்தகிரி

ஊட்டிக்கு அடுத்தப்படியாக இரண்டாவது பெரிய மலைத்தொடர் ஆகும். மலையேற்றத்திற்கு சிறந்த இடமாகவும், இங்குள்ள பள்ளிகள் அப்பகுதியின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுகிறது.

13.அண்ணாமலை கோவில்

ஊட்டியிலிருந்து 20கி.மீ தொலைவில் அண்ணாமலை கோவில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியிலுள்ள ஆய்வு மையம் பார்வையாளர்களை கண்களுக்கு அழகான காட்சியளிக்கிறது.

14.துரூக் கோட்டை

இந்த கோட்டை பழமை வாய்ந்தது. சமவெளியில் இருந்து 6000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. வரலாற்று கூற்றின்படி, திப்புசுல்தான் பயன்படுத்திய புறக்காவல் நிலையமாகவும், அனைவராலும ஈர்க்கக்கூடிய இடமாகவும், இங்குள்ள அற்புதமான காட்சிகளாலும் நிறைந்திருப்பதால், இப்பகுதியை காண்பதற்கு அதிக அளவில் மக்கள் வருகை தருகின்றனர்.

15.லெம்ப் பாறை

ஊட்டியில் இருக்கிற முக்கியமான இடங்களில் குன்னூரில் அமைந்துள்ள பாறையும் ஒன்றாகும். இது நீலகிரி மலைபிரதேசத்தை ஒட்டி இருக்கும். இங்கிருந்து கோயம்புத்தூர் சமவெளியை பார்க்கும் காட்சி மிகச்சிறந்தது. குன்னூரில் வரக்ககூடிய ஓடை 5 ஆயிரம் அடி கீழே அமைந்துள்ளது.

16.கேத்ரின் நீர்வீழ்ச்சி

250 அடி உயரத்தில் இருந்து விழக்கூடிய நீர் பாய்ச்சல், மக்களை ஈர்க்கக்கூடிய அளவில் அமைந்துள்ளது. சாலை வழியாகச் சென்றால் நீர்வீழ்ச்சியின் உச்சிப்பகுதி வரை செல்லலாம். உயரத்திலிருந்து விழக்கூடிய நீர்வீழ்ச்சியை காணும் போது வாழ்க்கைக்கு தேவையான தோற்றத்தை தருகிறது.

17.காட்டெருமை பள்ளதாக்கு

இந்த பகுதியை சுற்றிலும் காட்டெருமைகள் அதிகமாக காணப்படுவதால் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பள்ளதாக்கு அழகான பசுமை நிறைந்த இடமாகவும், கரடி, மான், புலி, காட்டெருமை, யானை, போன்றவற்றின் இருப்பிடமாக அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள மலையேற்றம் என்பது மகிழ்;ச்சி தரக்ககூடியதாக உள்ளது.

18.ஸ்டீபன் தேவாலயம்

1829-ம் ஆண்டு இங்கிலாந்தின் கிறிஸ்துவ கோவிலை சார்ந்தவரால் கட்டப்பட்டது. நீலகிரியிலுள்ள பழைமை வாய்ந்த தேவாலயம் ஆகும். இங்கு மதம் சம்பந்தபட்ட புகைப்படங்கள் மற்றும் கண்ணாடியில் வரையப்பட்ட ஓவியங்கள் அதிகமாக உள்ளதால் இங்கு வரக்கூடிய பார்வையாளர்களுக்கு இங்கிருந்து செல்ல முடியாத ஒரு அனுபவத்தை தருகிறது.