Menu
have us call you back!
Name*
E-mail address*
Phone number*

பணசேமிப்பது அனுபவத்திற்கு, பொருளுக்கு அல்ல. அதற்கான காரணம்

எல்லாரும் நாளுக்கு நாள் கடுமையாக உழைத்து பணத்தை பணப்பையில் தக்க வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நேரத்தில், கொஞ்சம் யோசனை செய்து பார்த்தால் உண்மையான சந்தோசத்தை எது தருகிறது என்பதை உணரமுடியும். பணத்தை பொருட்கள் மீதான துணிகள், வீடுகள், மகிழ்வுந்துகள், தொழில்நுட்பங்கள், மேலும் பலப்பொருட்களின் மீது பணத்தை செலவழிப்பது மகிழ்ச்சியை தருகிறது. இப்படி செலவு செய்வதனால், எந்த நன்மையும் இல்லை. ஆனால், பணத்தை பயணத்திற்கு செலவு செய்தால் அதற்கு ஓர் நன்மை இருக்கிறது. அதுதான் அனுபவம். இந்த பயணங்கள் மூலமாக கிடைக்கக்கூடிய அனுபவங்கள் வாழ்க்கையில் எந்த நேரத்திலும், காலக்கட்டத்திலும் அதை நினைக்கும்போது ஒருமிக்க மகிழ்ச்சியை தருகிறது. அதனால் தான் பணசேமிப்பது அனுபவத்திற்கு, பொருள் இல்லை..

1.அனுபவத்திற்கு முடிவு கிடையாது

அனுபவம் விலைமதிப்பற்றது. நிறைய பொருட்கள் மாதிரி காலங்கள், நேரங்கள் கிடையாது. அனுபத்திற்கு அளவு கிடையாது. பல வருடங்களுக்கு பிறகு இந்த அனுபவத்தை நினைவுப்படுத்தும் போது அதன் சந்தோசத்தை எப்போதுமே உணரமுடியம். வியட்நாமில் வண்டி ஒட்டுதலை கற்பனை செய்து, பணத்தின் மதிப்பை தெரிந்துகொள்ளுங்கள்.

2. ஆழ்ந்த விருப்பம்

உங்களின் அனுபவம் மிகுந்த செலவுடையதாக இருக்கவேண்டும் என்பது இல்லை. ஆனால், நம்முடைய விருப்பத்தையும், காரணத்தையும் உணர்த்துவதாக இருந்தாலே போதும். இந்த அனுபவங்கள் நாளுக்கு நாள் செயல்பாடுகளிலும், வாரத்தின் இறுதி நாட்களில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாக இருக்கும். நீங்கள் இந்த பயணத்தை விரும்பவதால் இருந்தால் மலேசியாவில் உள்ள தாமன் நிகரா தேசிய பூங்காவை நினைத்துக்கொள்ளுங்கள்.

3. மூன்றாவது கண்

பயணங்கள் மற்றும் மகிழ்ச்சியான தனித்தன்மை வாய்ந்த அனுபவங்கள் மூலம் சமுதாயத்தின் பிரிவுகளையும். கலாச்சாரங்களையும். கற்றுக்கொள்ள முடியும். இந்த உலகத்தை மூன்றாவது கண் மூலம் பார்க்க முடியும். துருக்கியில் உள்ள ஹெப்பாடோக்கியாஎன்ற இடத்தில் சூரியன் மறைவதை பார்க்கும் காட்சியை நம் இதயத்தில் என்றுமே நிறைந்திருக்கும்.

4. சிறந்த ஆசிரியர்

எந்த வகுப்பறையிலும், காணமுடியாத ஆசிரியர் தான் அனுபவம். யாருமே கற்றுக்கொடுக்க முடியாததை அனுபவம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. வாழ்க்கையில் ஏதேனும் ஒரு திருப்புமுனை ஏற்பட்டால் ஒரு மாதங்களோ அல்லது இரண்டு மாதங்களோ, இடைவெளிக்கு பின்பு நீங்கள் கண்டிப்பாக ஆஸ்திரேலியாவில் உள்ள கடற்கரை நகரங்களுக்கு செல்ல வேண்டும். இந்த அனுபவமும் நம்மை மனிதர்களாக மாற்றுகிறது.

5. லா பான் போராடு

அனுபவங்கள் ஒரு அர்த்தமுள்ள வார்த்தையாக இருந்தாலும், அவைகள் நம் வாழ்க்கைக்கு நன்றி கூறும் வாய்ப்பினை அளிக்கிறது. அங்கு நாம் வாழ்ந்து பெற்ற அனுபவம் என்றும் அழியாதவை, பயணம் செய்த அனுபவங்கள், நியூசிலாந்தின் தெற்கு தீவுக்கு செல்லும் பயணங்கள் சிறந்த அனுபவத்தை தருகிறது.

6. மூளையின் கறையை அகற்றுவது

அனுபவத்தை பற்றி ஆராய்வது, சிறந்த ஒன்றாகும். இது நம் மனதிற்கு மறக்கமுடியாத நினைவுகளையும், இன்பத்தையும் அளிக்கிறது. இது அழிக்க முடியாத, பார்த்து பின்பற்ற முடியாத, இவையனைத்தும் நம் மனதில் அழகான முத்திரைகள் போல பதிந்துள்ளது. கனடாவிற்கு போன அனுபவத்தை அளிக்கிறது. வானத்தில் பனித்தரை சறுக்கு விளையாட்டுக்கள் விளையாண்ட அனுபவத்தை பிரிட்டிஷ்
கொலம்பியா தருகிறது.

7. மிருகதனத்திலிருந்து விடுபடுதல்

அனுபவங்கள் நமக்கு ஊக்கத்தை அளிக்ககூடியதாக இருக்கிறது. இந்த அனுபவங்கள் வாழ்க்கையில் சவால் விடுவதற்கும், ஆறுதல் அளிக்கக்கூடிய ஊந்து சக்தியையும் நமக்கு அளிக்கிறது. மேலும் அனுபவங்கள் உள்ளுணர்வுகளை களையிந்து முடிவுகள் எடுப்படுதற்கும், மிருகதனத்திலிருந்து விடுபடுவதற்கும் உதவுகிறது. பமிர் மற்றும் தஜிஹிஸ்தானுக்கு சென்று கால்பதித்த பரபரப்பான அனுபவத்தை தருகிறது.

8. மாயமான தருணங்கள்

அனுபவங்கள் பயனுள்ளதாகவும், திரும்ப பெறமுடியாத ஒன்றாகவும் இருக்கிறது. இவ்வளவு பெரிய அனுபவங்கள் மனதில் ஆறு அல்லது எட்டு மாதங்கள் சேர்த்து வைக்கலாம். ஊக்கப்படுத்துவதாகவும், ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்கிறது. பயணத்திற்காக நம் பணத்தை செலவு செய்கிற அனுபவத்தை கோடிக்கணக்கான மாயமான தருணத்தை தருகிறது. சுவீடன் நாட்டின் லாப்லாந்தின் சுற்றுப்புறத்திலுள்ள அயனி மண்டலத்தில் ஏற்படும் அரோரா ஓளி ஒரு அழகிய அனுபவத்தை தருகிறது. சுவீடனுக்கு சென்று நம்முடைய வாழ்க்கை முழுவதும் அனுபவத்தால் நிரப்பிக் கொள்ளவேண்டும். இந்த அனுபவங்கள் முழுமையான மனநிறைவை தருகிறது. அனுபவத்திற்காக செலவு செய்கின்ற முதலீடு எப்பொழுதுமே இழந்து போவதில்லை. அதனால் இந்த மாதிரி பயணத்திற்கு பணத்தை செலவு செய்து அனுபவங்களை பெற்று கொள்ளவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *