மகிழ்ச்சியை மொத்த உள்நாட்டு உற்பத்தி மூலமாக கணக்கிடும் போது பூடான் முதலிடமாக உள்ளது. ஆனால் சில நாடுகள் தூங்காமல் கண்விழித்து கடினமாக உழைக்கிறதே மகிழ்ச்சியாக கருதுகிறார்கள். உலகில் இன்றைய காலக்கட்டங்களில் மகிழ்ச்சி என்;பது அரிதான ஒன்றாக கருதப்படுகிறது. எப்படியானாலும் ஒவ்வொரு நாடும் சுற்றுலா மையத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. நாம் கற்பனை செய்யும் போது, ஒவ்வொரு நாடும் அந்நாட்டின் குறைகள், நாகரிகங்கள் மற்றும் மகிழ்ச்சியை எப்பொழுதும் ஏற்றுகொள்வதில்லை. கற்பனை செய்யும் போது ஒவ்வொரு நாடும், கனடா மாதிரியாக இருக்கமுடியாது. இந்த செய்திகளெல்லாம் ஒருநாளில் காற்றில் மறைந்துவிடும், அதனால் உலகத்தில் உள்ள மகிழ்ச்சியான நாடுகளிலிருந்து நமக்கு தேவையானதை கற்றுக்கொள்ளவேண்டும்.
1. நார்வே – தரமான சுற்றுப்புறச்சூழல்
உலகிலே மகிழ்ச்சியான நாடுகளில் நார்வே முதன்மை நாடாக விளங்குகிறது. இவர்கள் செய்யக்கூடிய செயல்கள் சரியாக செய்து முடிப்பர். நார்வே நாடு அதன் சுற்றுப்புறசூழல், சமூக உணர்வு, சமூக இணைப்புகள், அதிகமான கல்வியறிவு, அனைத்திலும் பராமரிப்பதில் சிறந்து விளங்குகிறது. மேலும் சுற்றுலாத்தலங்களை ஏற்படுத்துவதுடன், இயற்கை அழகிற்கு போர்ட் மற்றும் கலாச்சார அழகிற்கு ஹோல்மென்கோலன் ஸ்கை ஜம் சிறந்து விளங்குகிறது.
2. டென்மார்க் – வேலையும், வாழ்க்கையும் சமநிலைபடுத்துதல்
உலகிலே மகிழ்ச்சியான நாடுகளில் டென்மார்க் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இவர்கள் வேலையையும், வாழ்க்கையும் சமநிலைப்படுத்துவதில் சிறந்து விளங்குகின்றனர். இவர்கள் வாரத்திற்கு 37 மணிநேரம் பணிபுரிந்து பணசம்பாதிப்பில் ஈடுபடுகின்றனர். டென்மார்க்கில் உள்ள மக்கள் தங்களுடைய சொந்த காரியங்களுக்காவும், ஓய்வு எடுப்பதற்கும், ஒருநாளில் 16.3 மணிநேரம் எடுத்துக்கொள்கின்றனர். இது ஒரு கனவு மாதிரியாகும். இங்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களுக்கும் இந்த செயல்பாட்டை அறிவிக்கின்றனர்.
3. ஜஸ்லேண்ட் – வாழ்க்கையில் அனைத்திலும் திருப்தி அடைதல்.
ஜஸ்லேண்ட் நாடு, வேலை மற்றும் பணம் சம்பாதிப்பதில் ஒரு சிறந்த இடத்தை பெறுகிறது. புள்ளியியல் விவரப்படி 15 வயது முதல் 64 வரை உள்ளவர்களில் 82 சதவீதம், வேலை செய்கின்றனர். இதில் 84 சதவீதம் ஆண்களும், 80 சதவீதம் பெண்களும், ஊழியர்களாக உள்ளனர். இதனுடன் வாழ்க்கையின் மொத்த செயல்பாடுகளிலும் திருப்தியடைகின்றனர். நல்லசெயல்களை செய்கின்றனர். உடல்நலம் பேணுவதிலும், தங்களை பாதுகாத்து கொள்வதிலும், கல்வி, திறமையான மற்றும் சராசரியான சமூக இணைப்புகளிலும் சிறந்து விளங்குகின்றனர். நாமும் வாழ்வில் நீண்ட தூரம் செல்வதற்கு, வேலையில்லாத திண்டாட்டம், திருப்தி அடையாத சூழ்நிலையும் ஒரு காரணமாகும்.
4. சுவிட்சர்லாந்து – சமுதாய உணர்வு
மகிழ்ச்சியான நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று. ஏனென்றால் இங்கு சமுதாய உணர்வு அதிகம் காணப்படுகிறது. கொடுரமான நேரங்களில் 96 சதவீத மக்கள் இதனை நம்புகின்றனர். சுவிட்சர்லாந்தில் திகைப்பூட்டக்கூடிய செயல் என்னவென்றால், வேலை செய்கிறவர்களில், தாய்மார்களுக்கு மகப்பேறு விடுப்புகாலம் வழங்குவது என்பது சட்டஉரிமையாகும். இந்த நாட்டினை வசப்படுத்துவதற்க போதுமானதாக இல்லையென்றால், சுவிஸ் நாட்டின் அனைத்து வகையான சாக்லெட்டுகளை நினைத்துக் கொண்டு சுற்றுலா விருப்பங்களை ஆராய்ச்சி செய்யுங்கள்.
5. பின்லாந்து – கல்வி மற்றும் வேலை, வாழ்க்கை சமநிலைப்படுத்துதல்
பின்லாந்து நாடு கல்விக்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தை கொடுக்கிறது. வேலை நேரத்தையும், வாழ்க்கையும் சமநிலையைபடுத்துகிறார்கள். ஆனால் 4 சதவீதம் உழியர்கள் மட்டும் அதிகமான நேரத்தை வேலையில் செலவிடுகின்றனர். வாழ்க்கைக்கு தேவையானவற்றை சம்பாதிக்கவும், வேலையின் கலைகளையும் இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
6. கனடா – உடல்நலம்
கனடா நாட்டில் உள்ள அனைத்து குடிமகன்களும் மற்றும் நிரந்தரமாக குடியிருப்பவர்களும், மருத்துவ காப்பீடு செய்து கொள்கின்றனர். கனடாவில் உள்ள சுகாதார மையத்திற்கு வரி செலுத்துகின்றனர். அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இங்குள்ள மருத்துவமனைகள் மற்றும் மருந்தக கடைகளுக்கு இந்த மருத்துவ காப்பீட்டு அட்டையை பயன்படுத்துகின்றனர். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கு ஏற்றார் போல கனடாவில் உள்ள மக்கள் உண்மையாகவே செல்வமுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர்.
7. பூடான் – மொத்த நாட்டின் மகிழ்ச்சி
பூடான், உலகிலேயே புத்த ஆட்சிக்கு உட்பட்ட நாடாகும். பூடானின் வளர்ச்சியின் அளவுகளை மொத்த நாட்டு உற்பத்திற்கு பதிலாக மொத்த நாட்டு மகிழ்;ச்சியின் மூலம் கணக்கிடப்படுகிறது. பூடான் சுற்றுலா மையம் தரமான வாழக்கை மற்றும் பொருட்கள், ஆன்மீக இன்பங்கள் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
8. ஸ்சுவீடன்
ஸ்சுவீடன் ஒரு குடியுரிமை நாடாகும். இந்நாடு 86 சதவீதம் வாக்காளர்களைப் பெற்றுள்ளது. இந்நாடு பரந்த சமூக உள்ளடக்கத்தை கொண்டிருப்பதால் அதிகப்படியான வாக்காளர்களை கொண்டுள்ளது. ஸ்சுவீடன் நாட்டிற்கு நன்றி கூறுங்கள். அப்சல்யூட் வோட்கா, ஹபா மற்றும் மரப்பொருள் இடங்களை இங்கு காணமுடியும். இந்த நாட்டில் அதிகப்படியான வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். நாம் அவர்களிடமிருந்து வாக்களிப்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.
கடினமாக உழைக்கும போது தான், மகிழ்ச்சியடைகிறோம். உலகில் எட்டு மகிழ்ச்சியான நாடுகளாகவும், அழகான சுற்றுலாத்தலமாகவும் உள்ளது. நம்முடைய பயணத்திட்டத்தில் இந்த நாடுகளை சேர்க்க தவறினால் கண்டிப்பாக வருத்தமடைவோம்.