Travel Blog by Thomas Cook India

கேரளாவில் உள்ள 30 சிறந்த இடங்கள்

இயற்கையான அழகை ரசிப்பதற்கு வெளிநாடுகளுக்கு பயணம் செய்கிறோம், ஆனால் அதே மாதிரியான இயற்கை அழகுகள் கேரளாவிலும் உள்ளது. கடவுளின் நகரமாக விளங்குகிறது. இங்கு வியப்பூட்டுகின்ற காட்சிகள், நீர்வீழ்ச்சிகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் அழகான கடற்கரைகள் இப்பகுதியில் சுற்றிலும் அமைந்துள்ளது. பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை தருகிறது. சிறந்த வழிக்காட்டுபவர் மூலமாக கேரளாவை கண்டிப்பாக சுற்றி பார்க்கவேண்டும். நல்ல நேரங்கள் வரும், போகும், ஆனால் நினைவுகள் என்றைக்குமே மாறாது. நினைவுகளின் இருப்பிடமாக கேரளா விளங்குகிறது. இதனால் இங்கு வரக்கூடிய பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

1.இயற்கை காட்சிகள்

பறவைகள் சரணாலயங்கள், சாகச நிகழ்ச்சிகள், மேற்குதொடர்;ச்சி மலைகள், இயற்கையின் மீது பனித்துளி காட்சிகள் மற்றும் கேரளாவின் அற்புதமான இயற்கை காட்சிகள், கண்டு மகிழ்ச்சி அடையலாம் இயற்கையை விரும்புகிறவர்களுக்கு மட்டுமில்லாமல் மக்கள் அனைவரும் விரும்பக்கூடிய இடமாக விளங்குகிறது.

2. யோகா மற்றும் தியானம்

26.கேரளா மாநிலம் தியானம், யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சைக்கு ஏற்ற உறைவிடமாக விளங்குகிறது. மனசு, உடல் மற்றும் ஆன்மா, தன் நினைவிழந்த நிலை, மன அமைதியை மாற்றக்கூடிய மையங்களாக விளங்குகிறது.

3. கோடநாடு – யானை குளிக்கக்கூடிய பகுதி

கேரளா சுற்றுலா மையம், நாம் வௌ;வேறு விதமான செயற்பாடுகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும்போது, வாழ்நாள் அனுபவத்தை கொடுக்கிறது. இவைகளில் ஒன்றாக யானைகள் குளிக்கும் காட்சி, பூமியில் மிகவும் அறிவார்ந்த மற்றும் நம்பிக்கையுடைய விலங்கு – யானை. இது தவிர சிறிய யானைகள் தனித்தனியாக நின்று தீணி சாப்பிடும் காட்சியை பார்க்கமுடியும்.

4. படகு சவாரி – ஆலாப்புழா

கேரளாவில் உள்ள சிறந்த இடங்களில் இதுவும் ஒன்றாகும். வாழ்வில் தடுமாற்றம் மற்றும் பழைய நண்பர்களின் நினைவுகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய இடமாக விளங்குகிறது. இங்கு பல்வேறு விதமான பயணகப்பல்கள், கடற்கரைகள் மற்றும் மனநிறைவுள்ள சமையல்கள் இங்கு பார்க்க முடியும்.

5. தேயாம்

கலையை விட காட்சிகளே சிறந்தது. கலையை விரும்புகிறவர்களுக்கும், இயற்கையின் அழகை ரசிப்பதற்கும் கொச்சி சிறந்த இடமாகும். வடக்கு கேரளாவில் உள்ள கோவில்களில் தேயாம் நடனம் அபூர்வமான நடனமாகும். கோயிலின் சன்னதிகள் முன்னிலையில், விலங்குகளை வழிபடக்கூடிய காட்சிகளை இங்கு காணமுடியும்.

6. பாரம்பரியமாக மீன்பிடித்தல்

கேரளா மற்றும் இங்குள்ள மீன்பிடிக்கும் வலை உலகத்திலே பிரபலமான ஒன்றாகும். பாரம்பரியமிக்க படகில் மீன்பிடிக்க சென்றாலும், நம்முடைய நம்பிக்கை மற்றும் எந்த முறையினை தேர்ந்தெடுந்தாலும், வெறும் கையோடு திரும்புவதில்லை. மீன் பிடிப்பதற்கு பிரபலமான இடமாகும்.

7. தேவாலயம்

கேரளாவில் உள்ள தேவாலயத்தின் வழியாக நாம் ஒரு அமைதியான சுற்றுச்சூழலை உணர்கிறோம். ஆலப்புழாவில் உள்ள ஆத்தங்கரை தேவாலயம் உலகில் வௌ;வேறு இடங்களில் உள்ள மக்கள் வந்து வழிப்படக்கூடிய தளமாக உள்ளது. ஏனெனில் இங்கு வருவோரின் ஆன்மீக நம்பிக்கை மிக வலிமை வாய்ந்தது.

8. உணவுகள்

சில இடங்கள் மக்களுக்கு சலிப்புத் தரக்கூடிய இடமாக இருந்தாலும், கேரளாவை நோக்கி பயணம் விரிவடையுமானால் நம் அடிமனதில் இருந்து சுவை அரும்புகள் தெவிட்டும் நிலைக்கு வருகிறது. பாரம்பரிய உணவுகளான இட்லிகள், தோசைகள், அது மட்டுமல்லாமல், சமையல் கலையில் சிறந்த கலைஞர்களின் உணவு வகைகளை உண்பதன் மூலம் நாம் இழந்த சக்தி உடனடியாக திரும்ப பெறமுடியும்.

9. கோட்டைகள்

நீங்கள் வரலாற்று கோட்டைகளால் தாக்கப்பட்டவராக இருந்தால், கேரளாவை பார்வையிட மறக்கமாட்டீர்கள். சங்ககால மக்களின் ஆயுதம், போர் மற்றும் அற்புதமான அரண்மனைகளின் சகாப்தத்தை இக்கோட்டைகள் நமக்கு நினைவு படுத்துகிறது.

10. விலங்கியல் பூங்கா

கேரளா தாவரம் மற்றும் விலங்குகளை ஒன்று சேர்க்கும் இடமாக அமைகிறது. வன விலங்கு மற்றும் ஏரிகளின் திரைப்படமாக திருவனந்தபுரம் விலங்கியல் பூங்கா அமைகிறது.

11. அருங்காட்சியகம்

கேரளாவில் உள்ள அருங்காட்சியகத்தில் மக்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பொருட்களை தெளிவான வழியில் வைத்துள்ளனர். சாதாரண கலைஞர்கள் செய்த கைவினை பொருட்கள், வரலாற்று ஆபரணங்கள், தந்தம், சிற்பங்கள், ஆகியவை கடந்து சென்ற சகாப்தத்தை ஒரு நொடியில் நினைவுட்டுகிறது.

12. நீர்வீழ்ச்சி

கேரளாவுக்கு சென்றாலே, இந்நீர்வீழ்ச்சியை பார்ப்பதற்கு பரிந்துரை செய்வார்கள். இந்த தொடர் நீழ்ச்சியானது நம் மனதிற்கும், உடலிற்கும் குணமாக்ககூடிய உணர்வை தருகிறது. இது நமது ஆன்மாவை குளரிரூட்டுவதோடு இயற்கை நமக்கு அமைதியின் விளைவை மட்டுமே தரும் என்பதை உணர்த்துகிறது. இது உங்களின் விருப்பமான இடமாக வேண்டும் என்றால் இதை ஜீன் மற்றும் நவம்பர் மாதங்களில் பார்க்கலாம்.

13. சூரிய அஸ்தமனம்

கேரளாவில் உள்ள சூரிய அஸ்தமனமானது உங்களை ஆச்சரியம் ஊட்டும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அது மிகவும் அழகாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இருக்கும்

14. தென்னந்தோப்பு

கேரளா தேங்காய் மற்றும் ரப்பர் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. இங்குள்ள இளநீரை குடிப்பதன் மூலம் மனதையும் உடலையும் புதுப்பித்து கொள்ளமுடியும்.

15. இரயில் பயணம்

இரயில் பயணம் ஏராளமான இடங்களை முழுமையாக பார்க்க உதவுகிறது. உப்பங்கழி, தென்னங்கீற்று மற்றும் அழகான ஏரிகளை பார்க்கமுடிகிறது.

16. மேட்டன்சேரி அரண்மனை

இந்த அரண்மனை பற்றி வரலாற்றில் கேள்விபட்டிருப்போம். இந்த அரண்மனையானது இயற்கை அம்சங்களையும், கொச்சியில் உள்ள அரசர்களின் புகைப்படங்களை ஓவியங்களாகவும் மற்றும் சுவரோவியங்களாகவும் கொண்டுள்ளது.

17. இடைக்கல் குகைகள்

வேயநாடு பகுதியில் உள்ள அம்புக்குத்தி மலையில் அமைந்துள்ளது. கற்காலங்களில் உள்ள வரலாற்றை இந்த குகைகள் எடுத்துரைக்கிறது. கி.மு.8700 ஆண்டுகளுக்கு முன்னதாக உள்ள பல்வேறு விதமான உருவகபடங்களை காணமுடியும். பண்டைய காலங்களில் உள்ள தொல்பொருள் மற்றும் மனித தொழில்நுட்பங்களை பிரதிப்பலிப்பதாக உள்ளது.

18. நீளமான படகு போட்டி

இங்கு படகு போட்டி மற்றும் தண்ணீர் சம்பந்தபட்ட விளையாட்டுக்களில் பங்கு பெற முடியும். கோவளம் மற்றும் ஆலாப்புழா கடற்கரைகள், இங்கு வரக்ககூடிய பார்வையாளர்களுக்கு புத்துணர்வையும், மனஅழுத்தத்தையும் குறைப்பதற்கும் சிறந்த இடமாக உள்ளது. இந்த படகு போட்டி ஜீலை முதல் செப்டம்பர் மாதங்களில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும். இந்த படகில் தங்குவது சிறந்த அனுபவத்தை தரும்.

19. கடற்கரைகள்

கேரளாவில் உள்ள சிறந்த இடங்களில் கடற்கரையும் ஒன்றாகும். ஒவ்வொரு கடற்கரையும் ஒவ்வொரு விதமான கதைகளை கூறுகின்றது. மும்பையில் உள்ள கடற்கரையில் எப்போதுமே மக்கள்கூட்டம் அதிகமாக இருக்கும். கோவா கடற்கரை வாழ்க்கைக்கு தேவையான அமைதியை எடுத்துரைக்கிறது. கேராளாவில் உள்ள கடற்கரையானது விசித்திரமானதாகவும், அமைதியாகவும் காணப்படுகிறது. இங்குள்ள கடல் நீர் பாய்;ச்சலை தனிமையாக காணும்போது நமது ஆன்மாவிற்கு மகிழ்ச்சியை தருகிறது.

20. இடுக்கி

கேரளாவிற்கு சுற்றுலா செல்ல நினைக்கும் போது இயல்பாகவே நம்முடைய மனதில் தோன்றுவது இடுக்கி பைக் ரைடு ஆகும். சுற்றுலாப் பயணிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி, அங்குள்ள இயற்கை நில அமைப்பையும், பைக் ரைடு கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த பைக் ரைடு போகும் போது, திகைப்பூட்டும் அளவிற்கு பெரிய தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் இடுக்கி அணைக்கட்டு ஆகியவற்றை காணமுடியும். உறுதியாகவே இப்பகுதி இயற்கையான அழகினை உடைய இடமாகவும், தினமும் இந்த இடத்தை பார்வையிடுவதற்கு நம்மை தூண்டக்கூடியதாகவும் அமைகிறது.

21. மூங்கில் படகு

கேரளாவில் மூங்கில் படகு தனித்தன்மை வாய்ந்த ஒன்றாகும். தவிர்க்க முடியாத ஒன்றாகும். தேக்கடியில் பெரியார் புலி சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு இயற்கை அழகுகள் மற்றும் விலங்குகள் மற்றும் பறவைகள் பார்த்து மகிழ்ச்சி அடையலாம்.

22. கயாக்கிங் (படகு சவாரி)

இங்கு குடும்பத்துடன் சென்று படகுசவாரி செய்வது மகிழ்ச்சியை தரும். கேரளாவில் உள்ள கலாச்சாரம் மற்றும் பாரம்பரியமிக்க அனுபவத்தை பெற முடிகிறது.

23. மலையேறுதல்

கரடுமுரடான மற்றும் செங்குத்தான மலைகளில் ஏறுவதற்கு கேரளா சிறந்து இடமாக விளங்குகிறது. வேயநாடு பகுதியில் உள்ள சேம்பரா உச்சி மலைஏறுவதற்கு சிறந்து விளங்குகிறது.

24. கூடாரத்தில் வசிப்பது

கேரளாவில் கூடாரத்தில் வசிப்பதும், மரத்தினால் செய்யப்பட்ட வீடுகளில் வசிப்பதும் இயற்கை காட்சிகளோடு அமைந்து காணப்படுகிறது. மேலும், விலங்கினங்கள் இருக்ககூடிய இடங்களை பார்க்கும் போது, உண்மையாகவே உற்சாகத்தையும் எழுச்சியையும் தருகிறது.

25. உடற்பயிற்சி

பாரம்பரியமான உடற்பயிற்சி மேற்கொள்ளாமல், தொழிற்நுட்ப வகையில் உடற்பயிற்சியை மேற்கொள்கிறோம். இங்கு விவசாயிகளின் அனுமதியை பெற்று நெற்பயிர் விளையும் வயல்வெளிகளில் நெற்குத்தல் செயலை செய்வது என்பது சிறந்த உடற்பயிற்சியாகும்.

26. வனவிலங்கு சவாரி

மனிதர்களை விட இயற்கை மிக அழகு வாய்ந்ததாகும். மனஅழுத்தத்தில் உள்ளவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் இடமாக உள்ளது. இந்த வனவிலங்கு சவாரி மூலமாக தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், பல்லுரியினங்கள், பசுமையான காடுகள் ஆகியவற்றை பார்க்கமுடியும். இந்த பகுதி இரவும் பகலும் சவாரி செய்வதற்கு ஏற்ற இடமாகும்.

27. யானை சவாரி

கேரளாவில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. இங்கு யானைகள் குளித்தல் மற்றும் உணவு சாப்பிடும் காட்சியை காணமுடியும். இந்த சவாரிகள் மறக்கமுடியாத உணர்வினை தருகிறது. யானை படகு சவாரியை, நம்முடைய சுற்றுலா இடங்களில் ஒன்றாக இருக்க வேண்டும்.

28. சிறுபடகு சவாரி

கேரளாவில் பார்க்கவேண்டிய இடங்களில் இந்த படகு சவாரி கவர்ச்சிகரமான ஒன்றாகும். இங்கு படகு சவாரி செய்வது என்பது சிறந்த செயல்பாடாகும். சவாரி செய்யும் போது இங்குள்ள இயற்கை அழகுகளையும், கேரளாவில் வாழக்கூடிய மக்களையும் காண்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது.

29. காளை பந்தயம்

காளை பந்தயம் சூதாட்ட செயல்களில் ஈடுபடாமல், கேரளாவின் பாரம்பரியமான பந்தயத்தை பின்பற்றுகிறது. இங்குள்ள காளை பந்தயத்தின் போது, பயணிகள் காளையின் மீது பந்தயம் வைத்து வெற்றி பெறவேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த காளை பந்தயம் மாலப்புரம் மாவட்டத்தில் நடைப்பெறும்.

30. பாராகிளைடிங்

பாராகிளைடிங் செய்வதற்கு கேரளாவில் உள்ள கம்பீரமான மலைகள் சிறந்த இடமாக விளங்குகிறது. இந்த செயல்பாடுகள் மகிழ்ச்சியான அனுபவத்தை தருகிறது. இதற்கு பயிற்சி தேவையில்லை. பாராகிளைடிங் செய்யும் போது துணிவும், மாலுமி மிகவும் அவசியமாகும்.

இத்தகைய அழகுவாய்ந்த கேரளாவை காண்பது கண்கள் கவர்ந்திழுக்ககூடிய பயணமாகவும், மறக்கமுடியாத பயணமாகவும் அமைகிறது.