இந்திய சுற்றுலா வரைபடங்களில் கர்நாடகா மிகச்சிறந்த அனைவராலும் ஈர்க்கப்பட கூடிய இடமாகும். கர்நாடகாவை சுற்றி மேற்கு கடற்கரை,
தக்காண பீடபூமி, காடுகள், மலைகள், கோவில்கள், குகைகள், ஆற்றங்கரை பகுதிகள், ஏரிகள், குளங்கள், காப்பித்தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளது.
1. பெங்க;ர்
கர்நாடகவில் உள்ள சுற்றுலாத்தலங்களில் மிகச்சிறந்த ஒன்றாக பெங்க;ர் விளங்குகிறது. இங்குள்ள மக்கள் பாரம்பரியம், கலாச்சாரம், வண்ணமய நகரமாக காட்சியளிக்கிறது. இங்கு வரும் பயணிகளுக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சியை உணர முடியும். இங்கு எப்போதுமே மிதமான காலநிலைகள் மற்றும் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கிறது. கோடை காலங்களில் இங்கு வருவதற்கு சிறந்த இடமாக இருக்கிறது. இங்குள்ள பென்னர்காட்டா உயிரியல் பூங்காவில் உள்ள வண்ணத்துப்பூச்சி அருகாட்சியகம், பெங்க;ர் அரண்மனை மற்றும் திப்புசுல்தான் அரண்மனை, இங்குள்ள உணவகங்களுக்காக உயிரை தியாகம் செய்யலாம். அவ்வளவு சிறப்பு பெற்று பெங்க;ர் திகழ்கிறது.
2. குவார்க்
இங்குள்ள காப்பித்தோட்டங்கள் மற்றும் மலைகளில் உள்ள பசுமையான மரங்கள் நீர்வீழ்ச்சிகள், மலைக்குன்றுகள், பிரமிக்கத்தக்க வகையில் உள்ளன. இதனால் இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படுகிறது. கர்நாடகாவின் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாகும். இங்குள்ள யானைகள் குளிப்பாதான காட்சிகள், யானை முகாம்கள்,
3. ஹம்பி
கர்நாடகாவிற்கு செல்லும் போதெல்லாம் ஹம்பி இடத்தை பார்ப்பதற்கு அனைவரும் சிபாரிசு செய்வார்கள். விஜயநகர பேரரசு காலத்தில் கலைக்கட்டிடக்கலைக்கு பெயர் பெற்ற இப்பகுதி ஐ.நா கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு கலாச்சாரம் நிறுவனத்தால்; அங்க{கரிக்கப்பட்ட இடமாகும். ஹம்பி இடிபாடுகளாக காட்சியளித்தாலும் 500க்கும் மேற்பட்ட கோயில்கள் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. குரங்குகோயில்கள், தொல்பொருள் அருங்காட்சியகம், விஜய விட்டலா சுவாமி கோயில்கள், விருபாக்~h கோயில்கள் கலை கட்டிடக்கலைகளின் அற்புதமான ஒன்றாகும். ஆற்றுப்பகுதிகளும் அழகு வாய்ந்த ஒன்றாகும்.
4. பாதாமி, ஐஹோல், பட்டாடகல்
பாதாமி, ஐஹோல், பட்டாடகல் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் பராமரிப்பற்ற ஒன்றாகவும், சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பற்றதாகவும், இங்குள்ள கலை கட்டிடக்கலைகள் செங்கற்களினால் வடிவமைக்கப்பட்ட ஒன்றாக இருந்த போதிலும் ஐ.நா வின் கல்வி மற்றும் அறிவியில் பண்பாட்டு கலாச்சார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். பாதாமி கோட்டை, புத்தரின் பாறைக்குகைகள், புத்நாத் கோயில்கள் ஆகியவை பாதாமில் புகழ் பெற்றவையாகும். துர்கா கோயில், லேட்கான் கோயில், தொல்பொருள் கோயில் ஆகியவை ஐஹோவில் புகழ்பெற்றவையாகும். விருபாக்~h கோயில், பாபநாதர் கோயில், கலங்கநாத கோயில்கள் பட்டாடகல்லில் பிரசித்த பெற்ற கோயில்களாகும்.
5.கபினி
கர்நாடகாவின் சுற்றுலாதலங்களில் மிக முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. கபினி ஆறு கபினி பகுதியில் நதி பாய்வதால் இப்பெயர் பெற்றது. இப்பகுதி மிகவும் அமைதியான சுற்றுப்புறச்சூழ்நிலையோடு காணப்படும். இங்கு படகு ஓட்டுவது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். கபினியாற்றை சுற்றி காப்பி மற்றும் நறுமணப்பொருட்களுடைய செடிகள் காணப்படுகின்றன.
6. ஜாக் நீர்வீழ்ச்சி
ஜாக் நீர்வீழ்ச்சி இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாகும். கர்நாடகா சுற்றுலாத்தலங்களிலே அனைவருக்கும் பிடித்த ஒரு இடமாக திகழ்கிறது. லிங்காமெக் அணைக்கட்டு, துங்க அணைக்கட்டு ஆகியவை நீர்வீழ்ச்சியருகே அமைந்துள்ளது. இங்குள்ள சிங்கம் மற்றும் புலி சரணாலயங்களை பார்க்ககூடிய இடமாக திகழ்கிறது.
7. மங்க;ர்
கர்நாடகவில் பிரபாலமான இடங்களில் மங்க;ரும் ஒன்று. இங்குள்ள கடற்கரை குளியல், கடற்கரை உணவுகள், சூரியன் அஸ்தமான நேரம், அங்குள்ள துறைமுகங்கள், ஒரு காலக்கட்டத்தில் பிரசித்தி பெற்று விளங்கியது. இங்குள்ள தண்ணீர்பவி மற்றும் பனம்பூர் கடற்கரை அழகான ஒன்றாகும். இங்குள்ள கோயில்கள் மற்றும் தேவாலயங்களின் கலை, கட்டிடக்கலையின் அற்புதமான ஒன்றாகும். இங்கு கடற்கரை உணவு பிரசித்த பெற்ற ஒன்றாகும்.
8. கர்வார்
கர்வார் பகுதியில் வலிமையான கோட்டைகள் கோயில்கள், கடற்கரையில் சூரியன் உதயமாகும் காட்சி அழகான ஒன்றாகும். ஆனால் மக்கள் கூட்டமே இருக்காது. இப்பகுதி அமைதியான சுற்றுப்புற அமைப்பை கொண்டது. படகு சவாரி செய்யும் போது குரும்கார்ட் தீவு அடையும் போது சதி~;கட்கோட்டை கொஞ்சம் கொஞ்சமாக தெரியும். கடற்கரை உணவு பிரபலமான ஒன்றாகும்.
9. கோகர்ணா
கோகர்ணா பகுதி மனஅழுத்தம், மனக~;டம் அப்படிப்பட்ட பயணிகளுக்கு ஒரு சிறந்த ஆறுதலான ஒரு இடமாகும். இங்கு, வரக்கூடிய பயணிகள், திரும்ப செல்வதற்கே மனதே இருக்காது. அப்படிப்பட்ட மக்களை தன்வசப்படுத்தி கொள்ளக்கூடிய இடமாகும். இங்குள்ள மஹாபல்லேஸ்வரர் கோயில்கள் கலை கட்டிக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஓம் கடற்கரையில் இருந்து சூரியன் மறையும் காட்சியை காண்பது அழகான ஒன்றாகும். இங்கு நீர்க்கடியில் விளையாட்டுக்கள், படகு சவாரிகள் புகழ் பெற்ற ஒன்றாகும்.
10. டான்டலி
டான்டலி பகுதி இயற்கைக்;கும் சாகசத்துக்கும் மத்தியில் அமைந்துள்ள ஒரு சுற்றுலாத்தலமாகும்.. இங்குள்ள மலை மற்றும் நிலப்பரப்பு இலையுதிர்காடுகள், ஆகியவற்றை உள்ளடக்கிய சிறந்த இடமாகும். கர்நாடகாவில் உள்ள முக்கியமான இடங்களில் இப்பகுதியும் ஒன்றாகும். இங்கு சாகசங்கள், முகாம்கள், படகு சவாரிகள், மீன்பிடித்தல், இவையனைத்தும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். இங்குள்ள கலியாறு பகுதியில் படகுவசவாரி செய்வது என்பது பிரபாலமான ஒன்றாகும். இங்குள்ள் டான்டலி வனவிலங்கு சரணாலயம் பார்க்ககூடிய ஒன்றாகும்.