Travel Blog by Thomas Cook India

இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாடகூடிய 10 இடங்கள்

இந்திய மக்கள் விரும்புகின்ற பண்டிகைகளில் ஒன்று ஹோலி பண்டிகை ஆகும். இந்த ஹோலி பண்டிகை கொண்டாடுகின்ற நேரங்களில் ஒவ்வொரு தெருக்களிலும் வானவில் வண்ணங்களாக காட்சியளிக்கிறது. ஆற்றல்களின் வெளிபாடாகவும், கொண்டாட்டங்களின் சிறந்த இடமாகவும் இருக்கிறது. ஒவ்வொரு இடங்களிலும் இப்பண்டிகை தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாடக்கூடிய 10 இடங்களை பற்றி காண்போம்.

1.மதுரா : பர்~hனா

மதுராவில் உள்ள பர்~hனா, இராதை பிறந்த இடம். நக்தோன் என்ற இடத்தில் இருந்து ஆண்கள் வந்து, பெண்களுடன் ஒன்று சேர்ந்து பர்~hன என்ற இடத்தில் இப்பண்டிகையை கொண்டாடுவார்கள். இங்குள்ள பண்டிகையின் சிறப்பம்சம் என்னவென்றால் நிறங்களுக்கு பதிலாக குச்சிகளை கொண்டு நடனமாடி, வரவேற்பார்கள். இப்பண்டிகையை லத்மர் ஹோலி என்றும் அழைப்பர். தாமஸ் குக் என்பவர் இக்ஹோலி பயணத்திற்கு விருப்பத்துடன் மதுராவிற்கு அழைத்து செல்கிறார். அதனால் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

2.மேற்குவங்காளம் :புருலியா

மேற்குவங்காளத்தில் உள்ள புருலியா என்ற இடத்தில் வண்ணப்பொடிகளுடன் மற்றும் பாரம்பரியமிக்க சௌ நடனத்துடனும் ஹோலி பண்டிகை கொண்டாடி வருகின்றனர். இந்நடனத்தை இதுவரை பார்த்திருக்கவே முடியாத ஒன்று. அதனால் இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது.

3.பஞ்சாப் : அனந்தப்பூர் சாகிப்

பஞ்சாப்பில் உள்ள அனந்தப்பூர் சாகிப் என்ற இடத்தில் வண்ணங்களுடன் மட்டுமல்லாமல் அதிகப்படியான உடல் செயல்பாடுகளால் ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை, தற்காப்பு கலைகளுடனும், உடல்சுறுச்சுறுப்புடனும், கொண்டாடும்போது உள்ள காட்சியை நாம் பார்க்கும்போது நமது கண்களுக்கு விருந்தளிக்கிறது.

4.வாரணாசி

வாரணாசியில் கொண்டாடக்கூடிய பண்டிகை ஆன்மாவை அதிர வைக்ககூடிய அளவிற்கு அனுபவத்தை தருகிறது. ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்கு புனித இடமாக உள்ளது. இந்த வாரணாசி ஹோலி பண்டிகையிலிருந்து கண்டிப்பாக நன்மையை பெறமுடியும்.

5.ராஜஸ்தான் : உதய்ப்பூர்

ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூரில் பிரம்மாண்டமான ஹோலி பண்டிகை காத்திருக்கிறது. மீவார் அரச குடும்பத்தினர் உதய்ப்பூர் செல்லும்போது வரவேற்பிற்காக, புகழ்மிக்க குதிரைகளின் அணிவகுப்பு இருக்கும். ஹோலி பண்டிகைக்கு முந்தைய நாள் இரவு முழுவதும் பவனி வருதல். பின்பு இந்த உதய்ப்பூர் நகரம் முழுவதும் வண்ணங்களின் உயிரோட்டமாக இருக்கும்.

6. மகாரா~;டிரா : மும்பை

மகாரா~;டிராவில் உள்ள மும்பை கனவுகளின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஹோலி பண்டிகை கொண்டாடத்தை, வண்ணங்களுடனும் மற்றும் இசைகளுடனும் ஒவ்வொரு தெருவிலும் நிறைந்திருப்பதை பார்க்கும்போது மும்பைக்கு நம்மை வரவேற்பதை உணர முடிகிறது. மேலும் அளவற்ற மகிழ்ச்சியை தருகிறது.

7.ராஜஸ்தான் : ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூரில் ஹோலி பண்டிகையானது ஒரு தனித்தன்மை வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது. இந்த பண்டிகையின் ஒரு பகுதியில் வண்ணநிற ஆடைகளுடனும், அழகாக அலங்கரீக்கப்பட்ட யானைகள் நிறைந்து இருக்கும். இந்த பண்டிகை கொண்டாட்டத்துடன் கூடிய அலங்கரீக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு மற்றும் கயிறு இழுத்தல் போட்டியும் நடைபெறும். இந்த பண்டிகையை விரும்புகின்றவர்களுக்கு ஜெய்ப்பூர் ஹோலி பண்டிகை ஒரு சிறப்பு விருந்தாக இருக்கும்.

8.கோவா:

கோவாவிற்கு விடுமுறை நாட்களில் ஹோலி பண்டிகைக்கு போகும்போது ஒரு மதிப்புமிக்கதாக இருக்கும். கோவாவில் இப்பண்டிகையை சிக்மோ என்றழைப்பர். இங்கு இந்த பண்டிகை கொண்டாடத்துடன் இசை மேளம் மற்றும் படை அணிவகுப்புகளும் இரவுநேர கேளிக்கை இசைகளும் கேளிக்கைகளுடன் விடுமுறைக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

9.கர்நாடகா : ஹம்பி

கர்நாடகாவில் உள்ள ஹம்பியில் பாரம்பரியமிக்க ஹோலி பண்டிகையின் அனுபவத்தை பெறமுடியும். பண்டிகை அன்று பாரம்பரிய நினைவுச்சின்னங்களுடனும், வண்ணங்களுடனும் காட்சி அளிப்பதை பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும். ஹம்பியில் இரண்டு நாட்களாக இக்ஹோலி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

10. மத்தியபிரதேசம் : இந்தூர்.

மத்தியபிரதேசத்தில் உள்ள இந்தூரில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் போது நமது இதயமே நடனம் ஆடும். முழுநகரடே ஒரே இடத்தில் ஒன்றுகூடி கொண்டாடுகின்றனர். நீங்கள் ஹோலி பண்டிகையை விரும்புகிறவர்களாக இருந்தால் கண்டிப்பாக மேற்கண்ட அனுபவத்தை பெறமுடியும். அதனால் இக்ஹோலிப்பண்டிகை விழாவில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.